குருநாகலில் மஹிந்தவுக்கு பாதிப்பு !

பொதுத் தேர்தலுக்காக ஐ.ம.சு.கூட்டணியில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், 

குருணாகல் நகரத்தில் அமைந்துள்ள ராஜபக்சவின் தேர்தல் அலுவலகத்தினுள் கெரம் போட்டிற்கு அவசியமான குறைந்த பட்சம் நான்கு பேரேனும் இல்லை.

இவ்வாறான நிலைமையில், ஹம்பாந்தோட்டையில் இருந்து குருணாகல் மாவட்டத்திற்கு தப்பி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதிக்கபட்டுள்ள நிலைமையினை காணமுடிகின்றது.

முழு நாடும் நிராகரித்த ஒருவரை குருணாகலில் வெற்றியடை செய்யும் அளவு முட்டாள் மக்கள் அம்மாவட்டத்தில் இல்லை என்பதனை மஹிந்த ராஜபக்ச புரிந்துக்கொள்ள வேண்டும்.

குருணாகல் மாவட்டத்திற்கு மோசடி, ஊழல், கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய கூட்டணி பெரும்பான்மை இம்முறை பொது தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர், அவர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

நாட்டிற்கு அவசியமாக இருப்பது குடும்ப ஆட்சி அல்ல அனைத்து மக்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய அபிவிருத்தியாகும், அதற்காக ஐக்கிய தேசிய கட்சி மீது நம்பிக்கையை வைக்கவும்.

இப்பயணம் மேலும் வலுவடைய செய்வதற்காக குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் என்னுடம் இணைந்து கொள்ளுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -