விஜய் படங்கள் என்றாலே தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மூன்று மாநிலங்களிலும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் டப்பான ஜில்லா படம் இதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இப்படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாம், இதற்காக நேற்று ஆந்திராவில் இப்படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி மற்றும் இயக்குனர் நேசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மேலும், விஜய்யின் மார்க்கெட் கேரளாவில் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, தற்போது தெலுங்கிலும் வெற்றி கொடி நாட்டியதால் விஜய் தான் தென்னிந்தியாவின் நம்பர் 1 நடிகர் என கூறி வருகின்றனர்.
