எம்.ஏ. தாஜகான்-
பொத்துவில் மத்தியஸ்தர் சபையினால் சமூக நட்புறவு இப்தார் நிகழ்வு இன்று 2015.07.02. பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பி.ப 5.30 மணியளவில் பொத்துவில் மத்தியஸ்த சபையின் தவிசாளர் என்.அப்துல் வஹாப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
சமூக நட்புறவு இப்தார் நிகழ்வில் இப்தார் சிந்தனையினை மௌலவி ஏ.எல். அப்துல் ஹமித் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல செனவிரத்ன, பொத்துவில் அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி உதயங்க, பொத்துவில் இராணுவ பொறுப்பதிகாரி கேர்ணல் கொத்தலாவ, பொத்துவில் குவாஸி நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம் சரிப், பொத்துவில் உபவலயக்கல்விப்பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ. காதர், சட்டத்தரணி இஸ்மாயில் ஆதம்லெவ்வை, மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.



