28 முன்னாள் MPக்கள் கலந்து கொண்ட மஹிந்தவின் மெதமுலன கூட்டம் - ஏமாற்றத்துடன் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மெதமுலனவில் நேற்று நடத்திய விசேட கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் 100 உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். எனினும், நேற்று மெதமுலனவிற்கு அண்மையில் கலைக்கப்பட்ட ஆறாம் நாடாளுமன்றில் அங்கம் வகித்த 28 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

சபாநயாகர் சமால் ராஜபக்ச, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, ஆர்.துமிந்த சில்வா, மாலினி பொன்சேகா, பவித்ரா வன்னியாரச்சி, கமலா ரணதுங்க, டி.பீ.ஏக்கநாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ஹெலிய ரம்புக்வெல்ல, சந்திரம வீரக்கொடி, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, நிசாந்த முத்துஹெட்டிகம, திஸ்ஸ கரலியத்த, மனுஷ நாணயக்கார, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, சரண குணவர்தன, காமினி லொக்குகே, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, பியசிறி விஜேநாயக்க, அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -