அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 150 இற்கு மேற்ப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 18.07.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கவேண்டிய கோதுமை மா தேயிலை தூள் சம்பள முற்பணம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்க முடியாத என நிர்வாகம் கூறியதையடுத்து உடனடியாக இச்சலுகைகளை வழங்கவேண்டும் என தெரிவித்தே இத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
அத்தோடு 1000 ருபா சம்பள உயர்வு கோரி தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட இவர்களுக்கு தோட்ட நிர்வாகம் இடையூர்களை கொடுப்பதாகவும் இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பெல்மோரல் பெரியநாகவத்தை, கிரன்லி ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.



