எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் புதிய நிர்வாக தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை (02) 5 ஆம் கொளனி மிஃராஜ் பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் நிர்வாக தெரிவுக்கு கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துனைத் தலைவருமான அப்துல் மஜீட் தலைமையில் நிர்வாக தெரிவு இடம்பெற்றது. இதன்போது முன்னால் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தாஜாப்தீன், அஸ்-சிறாஜ் மகா வித்தியாலய அதிபர் வை.யூசுப், முன்னால் சவளக்கடை மத்திய குழு அமைப்பாளர் ஏ.அஸீஸ், கட்சியின் கிளைக் குழுக்களின் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் அமைப்பாளராக எம்.ரீ.லத்தீப், மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் தலைவராக ஏ.சீ.ஏ.நஸார் ஹாஜி, மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் செயலாளராக எம்.வீ.நபாஸ், மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் பொருளாராக முகம்மது அலி, மத்தியமுகாம், சவளக்கடை மத்தியகுழுவின் துனைத் தலைவர்களாக ஏ.எல்.ஜலீல், ஏ.எம்.மஹ்ரூப், உப செயலாளராக ஜெ.எம்.சமீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் கடந்த காலங்களில் மத்தியமுகாம், சவளக்கடை என இரு குழுக்களாக நிர்வாகம் அமைக்கப்பட்டு இயங்கிவந்தது. இதனை கட்சியின் கிளைக்குழுக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இம் முறை மத்தியமுகாம், சவளக்கடை மத்திய குழு இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.





