வறிய குடும்பத்துக்கு வீடும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியும் தருவதாக நஸீர் MPC வாக்குறுதி!

அபு அலா-

லுவில் அல் அக்ஸா மகளிர் சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்குமிடையிலான கலந்துரையால் இன்று செவ்வாய்கிழமை (02) ஒலுவில் 7 ஆம் பிரிவு சனசமூக நிலைய கட்டிடத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அக் அக்ஸா மகளிர் சனசமூக நிலையத்தின் தலைவி எம்.எச்.றபீதா பல கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரிடம் முன்வைத்தார்.

இக்கோரிக்கைகளில் சிலவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏற்றுக்கொண்டார்.

அதில், மகளிர் சனசமூக நிலையத்தில் அங்கத்துவம் பெருகின்றவர்களில் வீடு இல்லாத மிக வறிய குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்றை பெற்றுத்தருவதாகவும், கணவனை இழந்து வாழ்வோருக்கும், வறிய குடும்பங்களுக்கும், வீட்டு கைத்தொழில் செய்வோர்களுக்கும் 

ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரம் நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாகவும் இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வாக்குறுதியளித்தார். 

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை ஆலங்குளம் பொது நூலகத்தின் உதவி நூலகர் ஏ.பி.அன்வர் மகளிர் சனசமூக நிலையத்தின் செயலாளர் ஆர்.றபீனியா, பொருளாளர் எஸ்.ரீ.நாகூர் உம்மா உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -