எம்.ரீ.எம்.பாரிஸ்-
தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் இனஐக்கியம் பேனும் வகையில் மாபெரும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (01.06.2015) திருகோனமலை மாவட்டத்தின் மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
மூதூர் பீ.கே பவுண்டேஷன் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கலீல் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.ரன்ஜித் மதுமபண்டார ,பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அமைச்சின் செயலாளர்கள்,அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 176 மாணவர்களும்,ஓய்வு பெற்ற 450 அரசாங்க உத்தியோகத்தர்களும்,பள்ளிவாயளில் முஆத்தின் இமாம்களாக கடமையாற்றும் இறைபணியாளர்கள்,சாலை முகாமையாளர்கள்,சமூக சேகவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினால் வறிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், மீனவர் ஒருவருக்கான தோணி, பெறுமதி வாய்ந்த சமையல் அறை உபகரணங்கள் என பல உதவிகள் இந்நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















