புதிய உப வேந்தர் நாஜிம் அவர்களுக்கு NIMCO வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது!

நிஸ்மி கபூர்-


தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நான்காவது உப வேந்தராக பதவியேற்றுள்ள பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களுக்கு தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பு (NIMCO) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பின் (NIMCO) செயலாளர் ஊடகவியலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் தலைமையில் ஊடகவியலாளர்களான ஊடக அமைப்பின் பிரதித் தலைவர் பி.எம்.கே.றஹ்மதுல்லா, தேசிய அமைப்பாளர் ஏ.ஜி.அப்துல் கபூர் ஆகியோர் அவரை பல்கலைக் கழக ஒலுவில் வளாகத்தில் நேரில் சந்தித்து தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பின் சார்பில் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு வாழ்த்துக் கடிதத்தினையும் கையளித்தனர்.

உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களுக்கு தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பினர் (NIMCO) வாழ்த்துக்களைத் தெரிவித்த பின் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி சினேகபூர்வமான முறையில் உரையாடினார்கள். உரையாடலின்போது புல்கலைக் கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களும் கலந்து கொண்டார்.

தனது பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெ ற்ற பேராசிரியர் நாஜிம்இ அப் பல்கலைக்கழகத்தில்10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

தாய்லாந்துஇ மலேசியாஇ சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50க்கும் மேற்பட்ட சர்வதேசஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலகின் தலைசிறந்த ஆய்வுமகாநாடுகளில்20க்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள்தனது ஆய்வு கட்டுரைகளுக்கு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம். முகம்மதுஇஸ்மாயிலின் பதவிக்காலம் கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -