நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்க வேண்டும் - அமைச்சர் குணவர்த்தன

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

பௌத்த, இந்து, இஸ்லாமிய மூவின சமய மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு வழிவகுத்து கொடுப்பதே நல்லாட்சியாகும் இந்நாட்டில் முதன்முறையாக அதனை ஆரம்பித்து வைத்தவர் ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவாகும் அவ்வாட்சியை உருவாக்குவதற்கு ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்கியவர்கள் நீங்களே-  என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காணி அமைச்சருமான எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.

இன்று எமது நாட்டில் மக்கள் ஜாதி பேதமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர். கடந்த தமிழ்,சிங்கள புதுவருடத்தை சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடினோம். 

அதேபோல பௌத்தர்கள் வெசாக்,பொசன் போன்ற திருநாட்களையும் சிறப்பாக கொண்டாடினர். நோன்பு காலத்தையும் நோன்புப் பெருநாளையும் இஸ்லாமியர் கொண்டாடவுள்ளனர் இவையெல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் நாட்டில் நல்லாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்று கந்தளாய் கிராமியபொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பினால் (றெக்டொ) பின்தங்கியகந்தளாய் பிரதேசத்திலுள்ள தமிழ்,சிங்கள,முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பைகளும்,அப்பியாசக் கொப்பிகளும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுஉரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கந்தளாய் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பின் (றெக்டொ)தலைவர் ஜே.எம்.அஸார் தலைமையில் 31 ஆயிஷh மகளிர் மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது பாடசாலைமாணவர்களாகிய நீங்கள் நன்றாக கல்வி கற்று சமூகத்தில் உயர் பதவிகளை வகிக்க வேண்டும் அப்போதுதான் சமூகம் நம்மை மதிக்கும் முன்மாதிரியானவர்களாக நீங்கள் மிளிர வேண்டும்எனவும் கேட்டுக் கொண்டார்.

நீங்கள் அறிய வேண்டும் பேராசிரியர் சரீப்டீன்தெற்காசியாவிலே துறைசார்ந்த சிறுநீரக வைத்திய நிபுணர் அவரைப்போன்று நீங்களும்தறைசார்ந்த நிபுணர்களாக வர வேண்டுமென உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

1980 காலப்பகுதியில் அரசியலுக்கு வந்த நான் இற்றைவரை இனப்பாகுபாடின்றி மக்களுக்கு சேவையாற்றிவருகின்றேன் எனது சேருவில தொகுதியில் மூன்று சமூகத்தினரும் வாழ்ந்துவருகின்றனர் இற்றைவரை இன விகிதாசாரத்திற்கு ஏற்ப எனது சேவைகளும் அபிவிருத்திகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

நான் காணி அமைச்சராக இருக்கின்றேன் என்பதால் காணிகளை பிடித்து ஜீவனோபாயத்தை நடத்தவேண்டிய எந்த தேவையுமில்லை தேவையான திணைக்களுங்களுக்கு காணிகளை எங்களால் பெற்றுத்தர முடியும்.

நீங்கள் உங்களது பிள்ளைகளை நன்றாக கல்வி கற்க வையுங்கள் அதற்கான அனைத்து விதமான தேவைகளையும் என்னால் நிறைவேற்றித்தர முடியும் என அவரது உரையில் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -