அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் நவீன வசதிகளுடனான பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளை திறப்பு விழா இன்று (15) திங்கட்கிழமை சர்வமத ஆராதனைகளுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் சம்மாந்துறைக் கிளை முகாமையாளர் ஏ.எம்.ஹம்ஷh தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்ன கலந்து கொண்டு வங்கிக் கிளையினை திறந்து வைத்தார்.
கௌரவ அதீதிகளாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரீ.ஏ.ஆரியபால, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் விஷேட ஆணையாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உட்பட ஏனைய வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள்,வாடிக்கையாளர்கள் பெரும் தொகையினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்ன உரையாற்றுகையில் சம்மாந்துறையில் 23வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வங்கி குறைந்த வளங்களுடன் இந்தப் பிரதேச மக்களுக்கு நிறைந்த சேவைகளை செய்து வந்துள்ளது.
இந்த வங்கி இன்று நவீன வசதிகளுடன் திறந்து வைப்பதற்கு மூலகர்த்தாக்களாக இந்த வங்கியினுடைய வாடிக்கையாளர்களாகும் உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் அத்துடன் இங்கு பணியாற்றிவந்த உத்தியோகத்தர்களின் அயராத முயற்சியும் காரணமாகும்.
சகலருடைய அர்பணிப்புக்களாலும் கட்டியெழுப்பப் பட்டுள்ள எமது பிரதேச அபிவிருத்தி வங்கி நாடளாவிய ரீதியில் 268 கிளைகளை கொண்டுள்ளதுடன் அனைத்து கிளைகளையும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன அத்துடன் மிக விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஏ.ரீ.எம். இயந்தித்தினை நிறுவவுள்ளோம்.
அத்துடன் இப்பிதேச மக்களுயை வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய தொழில் முயற்சிகளுக்கான கடன்திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளோம் இதற்காக உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்க நிறுவனம்,மத்திய வங்கி போன்றன் எமக்கு ஒத்துழைப்புக்கழை வழங்கவுள்ளது.
எமது பிரதேச அபிவிருத்தி வங்கி இலங்கையிலுள்ள அரசாங்க வங்களில் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது பிரதம மற்றும் கௌரவ அதீதிகளால் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் சுயதொழல் முயற்சிக்கான காசோலைகள், முச்சக்கர வண்டிகள், வீடமைப்புக்கான கடன் காசோலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.





