யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட ஈச்சம்பழம் யாழ் பல்கழைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படாது ஏன்


பாறுக் ஷிஹான்-

நோன்பு தினத்திற்கென யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இப்பேரிச்சம்பழங்களை வழங்கிய அமைப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நலனில் அக்கறை மேற்கொண்டு இப்பழங்களை வழங்கி வந்தனர்.

ஆனால் இம்முறை இப்பகுதிக்கென் விநியோகிப்பதற்கென வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் தேவையற்ற முறையில் பலருக்கு வழங்கப்பட்டுள்ளமை ஆதார பூர்வமாக வெளிவந்துள்ளது.
அத்துடன் ஒரு பாடசாலை அதிபரின் ஊடாக 24 ஆசிரியர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாசிரியர்கள் உள்ள மஹல்லாவிற்கும் மறுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதனை பார்க்கின்ற போது சிலருக்கு பல தடவை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் நல்லிணக்கம் எனும் பெயரில் முஸ்லீம் அல்லாதோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆதாரமே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள 450க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள்,வைத்தியசாலை பகுதி என்பன இம்முறை இப்பேரிச்சம்பழங்களை விநியோகித்தவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -