டைட்டானிக் , அவதார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் விபத்தில் உயிரிழந்தார்!

ஹொலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் கலிபோர்னியாவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

61 வயதான, ஜேம்ஸ் ஹோர்னர் டைட்டானிக் , பிரேவ் ஹார்ட், அவதார் , பியூடிபுல் மைந்த் உள்ளிட்ட ஹொலிவுட்டின் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஒஸ்கார் விருதினையும் ஜேம்ஸ் ஹோர்னர் வென்றுள்ளார்.

அவருக்கு சொந்தமான இலகு ரக விமானமே காட்டுப் பகுதியொன்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவரது மரணத்துக்கு ஹொலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான அவர் 100 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -