ஏறாவூர் –காயர் வீதியிலுள்ள வீடொன்றில் தரித்து வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த எம்.வை.சுபைர் என்பவருக்கச் சொந்தமான முச்சக்கரவண்டியே தீனால் தீயினால் எரிக்கபப்ட்டுள்ளது.
முச்சக்கர வண்டி முற்றாக எரிந்துள்ளது. ஏறாவூர்-காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது யூசுப் சுபைர் என்றவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியே எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உறக்கத்திலிருந்தவேளையில் இத்தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களின் உதவியுடன் தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. சுற்றுமதிலுக்கு மேலாக பெற்றல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஏஎம் றிகாஸ்
(ஏறாவூர் நிருபர்)