முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்-உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-

வில்பத்து மரிச்சுக்கட்டி விடயத்தில் இனவாதத்தை ஏற்படுத்தி முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மனிதாபிமான முறையில் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடைபெற வேண்டும்.

பைகிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை


வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் பயங்கரவாதிகளால் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு இலங்கையின் பல மாகாணங்களில் கடந்த 20 வருடகாலமாக அகதிகளாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து மரிச்சுக்கட்டி பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 

சில இனவாத சக்திகள் முஸ்லிம் மக்கள் மீது தவறான இனவாத உணர்வுகளை தூண்டுவதை கிழக்கு மாகாண சபை முழுமையாக கண்டிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு.கலபதி தலைமையில் நடைபெற்ற போது வில்பத்து மீள்குடியேற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபைய உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார். 

வடமாகாண முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சோகமான நிகழ்வுகளை நாம் மறந்துவிட முடியாமல் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி அமைச்சராக இருந்த போது இனவாதிகளின் செயற்பாடுகளை கண்டித்திருக்கின்றேன். இனவாதத்தை உருவாக்குபவர்கள் இனவாதத்தால் அழிக்கப்படுவார்கள் என்று இச்சபையில் அன்று கூறினேன். 

முஸ்லிம்களின் மனங்களை கொடுமைப்படுத்திய பொதுபலசேனா, ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புக்கள் விரைவில் சிங்கள மக்களாளும் நிராகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தேன். இன்று பொதுபலசேனாவையும் இனவாதிகளையும் சிங்கள மக்கள் கூட வெறுக்கின்றனர்.

 அகதிகளாக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த வடமாகாண முஸ்லிம்; மக்களின் மீள்குடியேற்றத்தை இனவாதமாக மாற்றும் இனவாத அமைப்புகளும், இனவாதிகளும் கடந்த காலங்களில் இனவாத உணர்வுகளை தூண்டியவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதனை ஒரு பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும். பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் கடந்த 30வருட காலமாக யுத்த சூழ்நிலையால் சகல இன மக்களும் பல துன்பங்களை அனுபவித்தனர். வடகிழக்கில் யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட சகல மக்களும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வில்பத்து மரிச்சுக்கட்டி விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களும் அரசாங்க உயர் அதிகாரிகளும் மனிதாபிமானத்துடன் செயற்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும். ஆனால் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின் வில்பத்து விடயத்தில் இனவாத சிந்தனைகள் தொடர்புபடுத்துவது நல்லாட்சி என்ற பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். எனவே, மனிதாபிமான முறையில் வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏகமான தீர்மாணம் எடுக்கப்பட வேண்டும் . கிழக்கு மாகாண சபையில் இனபேதமின்றி கடந்த காலத்தில் நமது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயல்களை கண்டித்து நாம் கண்டன பிரேரனைகள் நிறைவேற்றி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -