கண்டியிலிருந்து கட்சிப்போராளி-
மக்களுக்கு உதவுவது சில்லறை வேலை என்றால் செயலாளரின் வேலையும் மெகா டீலா
மு கா போராளிகள் விசனம்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் செயலாளருக்கு மக்களின் தேவைகளை கூறி உதவி கேட்டால் உடனே எனக்கு சில்லறை வேலைகள் செய்ய நேரம் இல்லை நான் ரெம்ப பிசினு சொல்றாராம்.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலர் தலைமைத்துவமிடம் புகார் செய்துள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் இவர் தான் மு.கா தலைவரின் அனைத்து அமைச்சுக்களிலும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிவுள்ளார்.
மத்திய மாகான சபையின் உறுபினராக இருந்தும் உருப்படியாக எதையும் செய்யாத இவர் மக்களுடன் இனிதாய் பேசுவதில்லை எரிந்து விழுகிறார் என்று பல குற்றச்சாட்டு மீது போராளிகளின் கண்டனம் பலமுறை தலைமைத்துவத்திடம் முன் வைக்கப் பட்டும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுவதால் மு கா தலைமைத்துவம் கண்டும் காணாமலும் இருப்பதாக போராளிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தாள் மு கா போராளிகளின் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்று கூறப்படுகின்றது.
