முதன்முறையாக கவர்ச்சியான சினிமா அழைப்பிதழ்…!

சினிமா படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஏதாவது வித்தியாசம் ஒன்றை காண்பித்து ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை கவர ஆர்வம் காண்பிப்பார்கள். சிலர் தலைப்பில் வித்தியாசம், படத்தில் வித்தியாசம் என புதுப்புது முயற்சி எடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஆடியோ வெளியீட்டு அழைப்பிதழில் அதிகம் வித்தியாசம் காண்பிப்பார்கள்.

அந்த வரிசையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சார்மி ‘ஜோதி லட்சுமி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவர் விபசார அழகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு அழைப்பிதழை வித்தியாசமாக பெண்ணின் மேலாடையை கலட்டுவது போன்று வடிவமைத்திருக்கிறார்கள். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -