இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிப்புணர்வு கூட்டம்!

எம்.ஜே.எம். சஜீத்-
குற்றவாளிகளாகாமல் வாழும் வழிமுறைகளை ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாவில் வினாயகபுர மகா வித்தியாலயத்தில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.கே. கமஹே தலைமையில் நடைபெற்றது.

மட்டகளப்பு மற்றும் அம்பாறை போன்ற பிராந்தியங்களில் நடைபெறுகின்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை தடுக்கும் முகமாக இவ் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றதுடன் எமது பிரதேசத்தில் நடைபெறுகின்ற விபத்துகள் சம்மந்தமாகவும், மோட்டார் வாகன சட்ட விதி முறைகள் சம்மந்தமாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு அக்கறைப்பற்று பொலிஸ் உத்தியோகர்களால் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீஸ்வரன், விசேட அதிதியாக இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் தேசிய இயக்குனர் எஸ். ஜெயராஜ், இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டு அம்பாறை மாவட்ட தலைவர் போதகர் டி.எஸ். தயாசீலன், வெளிக்கடை சிறைக்சாலையின் கைதிகள் நலன்புரி சங்கத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் ராச ஐயா ராஜஸ்வரன், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஏ.மர்ஜான் (54573), ஏ.எம்.நஹிம் (44129), ஏ.எம்.எம்.பரிஸ் (44394), கிராம உத்தியோகத்தர்களும் மாணவ மாணவிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -