மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்- நடிகை குஷ்பு அதிரடி

பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

புதுவை, முருங்கப்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டவர்.

அவரை காங்கிரஸ் கட்சி அறிமுகம் செய்யாவிட்டால், அவர் வெறும் சாமியாகத்தான் இருந்திருப்பார்.

அப்பேற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ரங்கசாமி தற்போது துரோகம் செய்து வருகிறார்.

காந்தி பெயரில்கூட காங்கிரஸ் இல்லை. ஆனால், அவரது கட்சிக்கு என்.ஆர்.காங்கிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இவர் என்ன காந்தியுடன் தண்டி யாத்திரைக்கு சென்றாரா? அல்லது சுதந்திர போராட்ட வீரரா?

புதுச்சேரி மக்களை அவர் ஏமாற்றி வருகிறார். ஆனால், புதுச்சேரி மக்கள் இனியும் ரங்கசாமியை நம்ப மாட்டார்கள்.

வரும் 2016 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தெரிவு செய்வார்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை மீட்போம் என்றனர். ஆனால் எதையும் செய்யவில்லை.

மேலும், பிரதமர் மோடி தான் வெளிநாட்டிலேயே இருக்கிறார். முதலில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என பேசியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -