பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
சம்பவத்தின் போது குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 ஊழியர்களும் பயணித்துக்கொண்டிருந்தனர். வளிமண்டலத்தில் காணப்பட்ட மந்தநிலை காரணமாக விமானம் குலுங்கியதால் ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று அதிகாலை 5.21 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்பின்னர், விமானத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்கள், விமான நிலைய வைத்திய பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார். ஏனைய நால்வரும், மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தீபால் பெரேரா கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -