தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக்கு அரசியல்வாதிகள் கூட்டாக இயங்க வேண்டும்.

கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்-

தென்கிழக்குப் பபல்பலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜூன் 21அம் திகதியிலிருந்து ஓய்வு நிலை அடைகின்றார்.

புதிய உபவேந்தர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய உபவேந்தர் தெரிவுக்கான முதற்கட்ட விருப்பு முறை மாற்று வாக்கு நடாத்தப்பட்டு முறையே, மூவரும் 10,09,08 வாக்கு என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த வாக்களிப்பில் பல்கலையின் 17 மூதவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (ஒருவருக்கு மூன்று வாக்குகள்.)
இதற்கடுத்த நடவடிக்கையாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் கல்வித் தகமை அனுபவம், நிருவாகப்பணி, தனித்துவமான விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

தேர்தல் முடிவுகளும், தராதரங்களும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அது உயர்கல்வி அமைச்சரைச் சென்றடைந்து இறுதியாக ஜனாதிபதியின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் யாவும் கிரமமாக நடந்து கொண்டிருக்க பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள சிலர் அல்லது அமைப்புக்கள் தமது மனம்போன போக்கில் கருத்துக்களை வெளிப்படுத்திப பல்கலைக்கழக வட்டாரத்தை மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்பல்கலைக்கழகம் மர்ஹூம் அஷஃரப் அவர்களின் பெருமுயற்சியனால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளதால் இது முஸ்லிம்களுக்கான பல்கலைக்கழகம் என்ற மன நிலையும் சிலரிடம் காணப்படுகின்றது அது தவறு இது ஒரு தேசிய பல்கலைக்கழகம்.

1995ஆம் ஆண்டு சில நூறு மாணவர்களுடன் கலை, வர்த்தக முகாமைத்துவ பீடங்களுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பல்கலையில் இன்று சுமார் 3400 மாணவர்களும் பொறியியல், பிரயோககணிதபீடம் உட்பட ஆறு பீடங்களில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர்.இவர்களுள் முஸ்லிம் அல்லாத 1425 மாணவர்களும் உள்ளனர்.

மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த 20 மாணவர்களும் சீன நாட்டைச் சேர்ந்த விரிவுரையாளரும் உள்ளனர்.

2010அம் ஆண்டு சர்வதேச பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் 16000வது இடத்திலிருந்து இப்பல்கலைக்கழகம் இன்று 8000மாவது இடத்திற்கு வந்த 50மூ முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இங்கு பயின்ற பட்டதார்களின் தொழில் தன்மையைப் பொறுத்தமட்டில் 2013ஆம் ஆண்டில் 50மூ மாக இருந்த தொழில் சந்தை வாய்ப்பு இப்போது 75மூ மாக முன்னேற்றம் கண்டுள்ளது.

மாணவர்களுக்குள்ள வசதிகள் பற்றி குறிப்பிடும் போது ஏனைய பல்கலைக்கழகங்களை விட இங்கு மாத்திரம்தான் முதலாம் வருட மாணவர் தொடக்கம் இறுதியாண்டு மாணவர்கள் வரை தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்துடன் நூலகம், மருந்தகம் உட்பட பல திணைக்களங்களும் அமையப் பெற்றுள்ளன.

கடந்த ஒரு சில வருடங்களில் தேசிய நிதி சுமார் 1000 மில்லியனும் வெளிநாட்டு உட்பாய்ச்சல் 2000 மில்லியனும் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒலுவிலில் 234ஏக்கரிலும் சம்மாந்துறையில் 40ஏக்கரிலும் பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் நாட்டிலுள்ள தேசியப் பல்கலைக்கழகங்களுடன் தேசிய மட்டத்தில் போட்டி போட்டு முன்னேறும் ஒரு பல்கலைக்கழகமாக இது விளங்கிக் கொண்டிருக்கிறது.

இப்பல்கலைக்கழகத்தின் அக்கறையுள்ளவர்கள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள முற்படும் சகல அரசியல் வாதிகளும் ஏனோதானோ என்ற போக்கைக் கைவிட்டு தமது அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்தையும் விரைவாகச் செய்து தகுதியான உப வேந்தரைத் தெரிவு செய்ய முழுமையான ஒத்துழைப்புக்களை கூட்டாக மேற்கொள்ள வேண்டும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி நாட்டிலுள்ள எந்தப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்கம் அரசியல் வாதிகள் தான் ஆணிவேராக இருப்பவர்கள். இப்பல்கலைக் கழக ஸ்தாபகர் அரசியல்வாதியாக, அதிகாரமுடையவராக இருந்த காரணத்தினால் தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடனும், முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சாட் பத்திரனவுடனும் கூட்டாக இணைந்து இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கினர்.

இப்பல்கலைக்கழகத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மூதவை உறுப்பினர்கள் 17 பேரும் அரசியல் கட்சி, அதன் தலைவர்களினால் சிபார்சு செய்யப்பட்டு வந்தவர்கள்.
உயர் கல்வி அமைச்சரும் அரசியல்வாதி தான், ஜனாதிபதியும் அரசியல் வாதி தான்.

ஆரசியல் வாதிகள் மக்களது பிரதிநிதிகள்.மக்களின் நலன் கருதி, அல்லது சமூக நலன் கருதி அமைச்சரவை நிறைவேற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவதும் பாராளுமன்றமும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் தான்.
சேர் ராஸிக் பரீட் இல்லையென்றால் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, முஸ்லிம் பெண்களுக்கான பாடசாலைகளும் கிடைத்திருக்காது.
பதியுதீன் மஹ்மூத் இல்லாமற் போயிருந்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர் நியமனங்களும் பல்கலைக்கழகத்துக்கான முஸ்லிம் மாணவர்கள் உள்வாங்கப்படுவதற்கான மாவட்ட கோட்டா முறையும் ஏற்படுத்தப்பட்டிருக்காது.

ஏ.ஆர்.எம்.மன்சூர்,எம்.ஏ.அப்துல்மஜீட், எம்.எச்.எம்.அஷ்ரஃப், எம்.ஐ.உதுமாவெப்பை ஆகியோர் முயற்சி எடுக்காதிருந்தால் அட்டாளைச்சேனையில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைந்திருக்காது.
பெருந் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் இல்லாமற் போயிருந்தால் தென்கிழக்குப் பல்கலையும், துறைமுகத் தொழில் வாய்ப்புக்களும் , மீன்பிடித் துறைமுகமும் (கப்பல் துறைமுகமாக உருவாக்க கனவு கண்டார் காலன் அவரைக் கவர்ந்து விட்டான்.) இல்லாமற் போயிருக்கும்.

எனவேதான் அரசியல் தேவையானதா? இல்லையா? என்பதனைப் புரிந்து கொண்டு அரசியல் வாதிகள் தமது கைங்கரியங்களை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக மாகாண சபை உறுப்பினர் ஒரு சிலர் இது குறித்து தமது குரலை ஓங்க ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள. அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -