பொத்துவில் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிப் பாவனை தடையா.....?

அலியார் தாஜஹான் -
பொத்துவில் பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிப் பாவனையை தடை செய்ய வேண்டும் என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை சிலர் உண்மைக்கு புறம்பாக திரிபுபடுத்தும் வகையில் பேஸ்புக்கிலும், பொத்துவில் பிரதேசத்திலும் பல்வேறுபட்ட விஷமக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

உண்மை என்னவெனில் தலைப்பு அவ்வாறு அமைந்த போதிலும் செய்தியின் உள்ளடக்கம் தொழுகையில் ஒலிபெருக்கிப்பாவனையை மட்டுப்படுத்தக் கோருவதாகவே அச்செய்தி அமைந்திருந்தது.

எந்தவொரு இடத்திலும் பாங்கை தடை செய்ய வேண்டும் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட வில்லை.

இதை தவறான கண்னோட்டத்தில் பார்ப்பவர்கள் தயவு செய்து தமது கருத்தை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்வதுடன், தெளிவு பெற விரும்புபவர்கள் பொத்துவில் ஜம்மியதுல் உலமா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதியை வாசிக்குமாறும் வேண்டுகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -