ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-
அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தத்தம் தொடர்பில் சிறுபான்மையினக்கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை ஞாயிற்றுக்கிழமை (14) இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாரூஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்றது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஆனந்த மானமடு, சரத் மனமேந்திர, குமரகுருபரன் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் கலந்து கொண்டு மிகவும் காட்டமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தனர்.

