அரசாங்கத்தினால் முடியாதெனில் எங்களிடம் ஒப்படையுங்கள் - டிலான் பெரேரா

ரசாங்கத்தினால் முடியாதெனில் தான் உள்ளிட்ட எதிர்கட்சியினர் 20வது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி காட்ட தயார் எனவும், அதற்கான அனுமதி வழங்குமாறும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொரளையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்ல தயாராகுமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.

20வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை. அதனால் அதை நாம் மக்களின் நலன் கருதி செய்து காட்டுகின்றோம் என முன்னாள் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டக்ளஸ் தேவானந்தா, ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரபா கணேசன் உள்ளிட்ட எதிர்கட்சியிலுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது இணைந்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -