கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை - கஹதுடுவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி ஐந்தாம் திகதி கஹவத்தை நகரில் வைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் பேரணி ஒன்றின் ஆயுத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.(ந)
