ராஜபக்சவினர் மேற்கொண்ட ஊழல், மோசடிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கும் போது அவர்கள் பல்வேறு விளங்கங்களை கூறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவினர் தாம் குற்றம் செய்யவில்லை என்று கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் ஒன்றை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தினமும் நாட்டில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு சென்று பௌத்த வணக்கஸ்தலங்களை அரசியல் மடமாக மாற்றி வருகிறார்.
மின்சார நற்காலிக்கு நான் பயப்படவில்லை என்று மார்பில் அடித்து கொண்டு கூறிய மஹிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கும் போது ”ஐயோ எங்கள வேட்டையாடுகின்றனர்” என்று கத்துகிறார்.
ஷிராந்தி ராஜபக்ச அரசியலில் ஈடுபடவில்லை. எனினும் ஜனாதிபதியின் பாரியார் என்பதை ஒரு பதவியாக பயன்படுத்தி வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதை நான் நேரில் கண்டுள்ளேன் எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
