எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரும் ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் பிரதமர் என சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னரும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதனை எவராலும் தடுக்க முடியாது.
திறைசேரியை சூறையாடி சாப்பிடுவதனைத் தவிர்த்து, அதன் நன்மைகள் பலன்கள் வரப்பிரசாதங்கள் சாதாரண மக்களைச் சென்றடையும் யுகமொன்று உருவாகியுள்ளது.
இதனால் யார் பிரதமர் பதவிக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தி அலைந்து திரிந்தாலும், பிரதமராக ரணிலே நியமிக்கப்படுவார்.யார் ஜனாதிபதி, யாரை பிரதமராக்க வேண்டும் என்பதனை மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
கடந்த காலங்களில் அபகீர்த்தியான, மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அரசியல் கட்சிகளை ஆக்கிரமித்துக் கொள்ள எவரும் இடமளிக்கக் கூடாது.
மக்களுக்கு சேவையாற்றி வளங்களை சரியான முறையில் பங்கீடு செய்து மெய்யான நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும் என சஜித் பிரேமதாச சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
