கோமாளி ஊடகவியலாளர் மகா நாட்டினால் முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தல் வரும் உவைஸ் ஹாஜியார் எச்சரிக்கை
தேர்தல் நெருங்கும்போது அரசாங்கத்தை விமர்சித்து மக்கள் ஆதரவை எதிர்பார்க்கும் அரசியல் கோமாளிகள் இன்னும் ஓயவில்லை உவைஸ் ஹாஜியார் கண்டனம் .
மத்திய மாகான சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
கடந்த அரசாங்கத்தின் அசமந்தப்போக்கினால் தலைவிரித்து ஆடிய பொது பல சேனா வின் தயவால் முஸ்லிம் மக்களின் கதாநாயகனாக உருவேடுத்துள்ளதாகவும் தான் முஸ்லிம் சமூகத்தின் தலைவன் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் சில அரசியல் கோமாளிகள் வாராவாரம் நடாத்தும் பயனற்ற ஊடகவியலாளர் மகா நாட்டினால் முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் ஒரு அச்சுறுத்தலான காலம் மிக விரைவில் வரும் சாத்தியம் காணப்படுகின்றது என்பதால் உடனடியாக ஊடக நாடகத்தை மூட்டைகட்டிவிட்டு முஸ்லிம்களுக்கு பயனுள்ள அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டுகோள் விடுக்கின்றேன் .
மகிந்த அரசாங்கத்தை விரட்டி அடித்து விட்டு முஸ்லிம் மக்களின் நம்பிக்கை நட்சச்திரமாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நாட்டை சகல மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து மிகவும் நிதானமாக அரசை அனைவரையும் அரவணைத்து மிக நிதானமாக சிறந்த பயணத்தை மேற்கொள்கிறார் என்பதில் முஸ்லிம் மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை .
இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வந்த சில அரசியல் வாதிகள் அந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதும் முடிந்த வரை பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு மறுபுறம் முஸ்லிம் மக்களும் மனதை கவரும் ஊடக நாடகமும் அரங்கேற்றி சும்மா இருக்கும் நாட்டை குழப்பி அரசியல் இலாபம் தேடும் அரசியலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்
முஸ்லிம் மக்கள் எந்த அரசிலும் சலுகைக்காக கை கட்டி நிக்கும் சமூகமில்லை என்பதையும் முஸ்லிம்களின் உரிமைக்காக எந்த அரசானாலும் துணிந்து எதிர்த்து போராடும் சமூகம் என்பதையும் அரசியல் புல்லுருவிகளுக்கு நினைவுட்டுகின்றேன் .
எனவே வீண் பேச்சுக்களுக்காக ஊட மாநாடு நடாத்தி நாட்டையும் மக்களையும் குழப்பி தனது அரசியல் நலனுக்காக முஸ்லிம்களை பலிகொடுப்பதை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்வதாக உவைஸ் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது