உழவு இயந்திரம் குடை சாய்வு - பயணித்தோர் படுகாயம்

எம்.எஸ்.சம்சுல் ஹுதா (பொத்துவில்)

சியம்பலாண்டுவயிலிருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கி சுற்றுலா வந்த உழவு இயந்திரம் பொத்துவில் பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் இன்று (2015.06.02) காலை குடைசாய்ந்ததில் அதில் பயணித்தவர்கள் படுகாயம். 

படுகாயத்திற்குள்ளாகியவர்கள் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக சிகிச்சைக்காக ஐவர் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொசன் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த உழவு இயந்திரமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்தததுடன் அதிக பயணிகளை ஏற்றி வந்தமையுமே குறித்த விபத்து இடம்பெற்றதற்கான காரணம் என நேரில் கண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இதில் 15வயதிற்கும் குறைந்த 05 சிறுவர்கள் பயணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -