இளைஞர் யுவதிகளின் தொழிற்பயிற்சி வகுப்புக்களை இடைநிறுத்தவில்லை!

அஸ்ரப் ஏ சமத்-

லிபியா நாடு கடந்த 2 வருடங்களாக யுத்த்தினால் பாதிக்கப்பட்டாலும் இலங்கையில் வாழும் இளைஞர் யுவதிகளின் தொழிற்பயிற்சி வகுப்புக்களை இடைநிறுத்தவில்லை. இந் நிறுவனம் கடந்த 10 வருடகாலமாக தொடர்ந்து இலங்கை இளைஞர் யுவதிகளுக்காக இலவசமாக பல்வேறு பயிற்சிநெறிகளை நடாத்தி வருகின்றது. 

ஏற்கனவே அரபு, கனனி, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சி, தையல் பயிற்சிகளையும் கொழும்பில் தொடர்ந்தும் நடர்ததி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு 3ல் உள்ள உலக சர்வதேச அழைப்பு லிபிய சங்கத்தின் கொழும்பில் வாழும் 30 பெண்கக்ளுக்கு சிங்கர் கம்பணி ஊடாக தையல் பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்த பென்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு உலக சர்வதேச அழைப்புச்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மௌலவி நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பணிப்பாளர் அப்துல் சலீம் கலிபா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வினை லிபிய தூதுவரலாயத்தின் சார்ஜ் டி அபயார்ஸ் கமல் பில் அஸ்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன் ஜாமியா நளீமியா சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ;ஷேக் உசாமா, கபூரியா அரபுக் கல்லூரி அதிபர் ஏ.ஆர். மஹ்ருப் ஆகியோறும் கலந்து கொண்டு யுவதிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர் அத்துடன் ; அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்தி பொருட் கன்காட்சியும் இடம்பெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -