தரை வழி மார்க்கத்தால் இணைகிறது இலங்கை - இந்தியா!

 லங்கை - இந்தியாவை தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா நேற்று மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. 

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். 

மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23 ஆயிரம் கோடி இந்திய ரூபா - இலங்கை மதிப்பில் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலைமன்னாரையும் (29கிலோமீற்றர்) இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுவதாக நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -