மஹிந்தவுக்கு மீண்டும் இடமளிப்பது துரோகமாகும் - சந்திரிக்கா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்குவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் இடமளிப்பது, இலங்கை சமாதானத்திற்காக போராடிய அனைத்து கட்சிகளும் இழைக்கப்படுகின்ற துரோகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி தொடர்பில் வெளிப்படையாக நாட்டிற்கு விழிப்புணர்வூட்டினார்கள்.

அவ்வாறு விழிப்புணர்வூட்டியவர்கள் அவருடன் இணைந்து ஒரு கட்சியாக தேர்தலில் ஈடுபடுவதன் மூலம் மஹிந்த மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் மக்கள் மனதில் அவநம்பிக்கை ஏற்பட்டு விடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கக் கூடாதென அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -