கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் பிரச்சினைகள் பற்றி ஆராய உயர்மட்ட குழு நியமனம்!

'சுமார் 60 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக்கொண்ட அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் வளர்ச்சியென்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒப்பீட்டடிப்படையில் நாட்டின் ஏனைய பிரதேசங்களில்; உருவான புதிய அரபுக்கல்லூரிகளுடைய அபிவிருத்திகளிலும் பார்க்க இதன் விருத்தியானது குன்றியிருப்பது கவலையளிக்கின்றது.

பௌதிக வளங்கள், நிர்வாகமுறைமை, அதன் பாடவிதான கற்கைநெறிகளில் காணப்படும் குறைபாடுகள் இந்த கல்லூரியின் ஆரம்பகால கீர்த்தி நாமங்ளைக்கூட புறந்தள்ளும் அளவிற்கு மேலோங்கியிருக்கின்றன. இந்த நிலைமைகளை தொடர்ந்தும் நாம் அனுமதித்துக் கொண்டிருப்பது இறைவனிடம் பொறுப்புக்;கூறும் எமது கடமைக்கு சவாலாக அமைந்திருக்கின்றது' 

இவ்வாறு அட்டாளைச்சேனைப் பெரியபள்ளிவாசலில் கடந்த 07-06-2015 ஞாயிறு நடைபெற்ற முத்தரப்பு கலந்துரையாடலில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஜனாப்.ஏ.எல்.எம்.அனீஸ் விரிவுரையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் நிர்வாகிகள், கிழக்கிலங்கை அரபுக்கல்லூரியின் பழைய  மாணவர்சங்கப் பிரதிநிதிகள் எனப்பலரும் இதில்கலந்துகொண்டனர். 

இம்மசூறாக் கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜாமிஆநழீமிய்யா சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளருமான அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.பழீல் BA தலைமைதாங்கினார். இக்கலந்துரையாடலில் விஷேடஅழைப்பின் பேரில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி.அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் அரபுக்கல்லூரியை நவீனதொழில் நுட்ப சவால்களுக்கு முகங்கொடுக்க கூடியதாக மாற்றயமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அப்பணியினை முன்னெடுப்பதற்காக முழுநேர அடிப்படையிலான தகுதிவாய்ந்த அதிபர் ஒருவரையும் உடன்நியமிக்க வேண்டுமென கூறினார்.

இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட சட்டத்தரணி அப்பாஸ் அவர்கள், பிரதேச செயலாளர்.எஸ்.எல்.எம்.ஹனீபா,எம்.தௌபீக் யுனுP, எச்.எம்.மக்பூல் பொறியியலாளர் ஜனாப்.லியாகத் அலி ஆகியோர் அரபுக்கல்லூரியின் நிர்வாகம் சார்பாக கலந்துகொண்டிருந்தனர். 

இஷா தொழுகை வரையும் நீடித்த இக்கலந்துரையாடலின் ஏகோபித்த முடிவாக அரபுக்கல்லூரியின் நிர்வாகத்தோடு கலந்துரையாடி முடிவுகளைக் காண்பதற்காக பின்வரும் பிரமுகர்களைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது.

1.ஏ.எல்.எம்.அனீஸ்- (தலைவர் அட்டாளை. பெரியபள்ளிவாசல்)
2.அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ்-(மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி)
3.அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.பளீல் (இணை.செயலாளர்-கிழ.முதலமைச்சர்)
4.கலாநிதி. ஹம்தூன்- (பல்கலை. விரிவுரையாளர்)
5.ஏ.எல்.எம.; பாறூக் ஆசிரியர்- (செயலாளர்,அட்டா.பெரியபள்ளிவாசல்)
6.அல்ஹாஜ். லியாகத் அலி-(உப தலைவர், கி.அரபுக் கல்லூரி)
7.மௌலவி. கமர்தீன்- (தலைவர், பழைய மாண.சங்கம்,கி.அ.கல்லூரி) 
8.மௌலவி. அமீர்- (செயலாளர், பழைய மாண.சங்கம்,கி.அ.கல்லூரி)
9.மௌலவி.பாஹிம்--பொருலாளர்,(பழைய மாண.சங்கம்,கி.அ.கல்லூரி)

அடுத்து நடைபெறவிருக்கும் அரபுக்கல்லூரியின் நிர்வாக/பொதுக்குழக் கூட்டத்தில் மேற்படி குழவனர் கலந்துகொண்டு தீர்க்கமான முடிவுகளை மசூறா அடிப்படையில் எடுக்கவேண்டும் என்றும், இக்குழவின் செயற்பாடுகளை இணைத்து தொடாந்தும் முன்னெடுப்பதற்கான தலைவராக கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.பளீல் கடைமையாற்றுவார் என்றும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -