அம்பாறை மாவட்ட ஐ.தே.க பட்டியலில் கல்முனை மாநகரசபை நபார்???

எம்.வை.அமீர்-

பாராளமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்களது கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்து வருகின்றன. அந்த அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும் சில முன்னிலைக் கட்சிகளை நோக்கி வேட்பாளர்கள் படையெடுக்கின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியை நோக்கி கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை அணிதிரளும் இவ்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சியும் தனது சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் பேசப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் தொகுதிகள் ரீதியாகவும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வயது குறைந்த வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதால் கல்முனை மாநகரசபையின் ஒரேஒரு உறுப்பினரான ஏ.எச்.எச்.எம்.நபார் அந்த இடத்துக்கு கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரான ஏ.எச்.எச்.எம்.நபார், நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -