விளையாட்டுக்கு பின் அரசியலா? சங்கா பதில்

லங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, அரசியல் பங்கேற்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் சங்கக்காரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம். நானும் இது பற்றி கேள்விபட்டேன். 'கலா வேவா' பகுதியில் நான் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாம் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நான் கிரிக்கெட்டை முழுவதும் விட முடியும் என்று நினைக்கவில்லை. அதனால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன்.

ஆனால் இலங்கை அணியில் விளையாட முடியாது என்பது கடினமான விடயம் ஆகும். அதே சமயம் இறுக்கமான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -