பி.எம்.எம்.ஏ.காதர்-
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் கே.காலிதீனுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும்,சிறப்பு மலர் வெளியீடும் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில்; பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான செய்யித் அலிசாஹிர் மௌலானா,எம்.எஸ்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற அதிபர் கே.காலிதீனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். பண அன்பளிப்பும் நினைவுப்பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.



