வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது ஜப்பானுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் வௌிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில் அவர் அந்த நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இலங்கைத் தூதுவர் ஒருவர் முதன்முறையாக ஜப்பானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மைகள் மற்றும் நெருக்கமான உறவுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.(ந)
