சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
விஜய் ஜோடியாக சமந்தாவும் எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேசி வந்தனர். சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கிறார்.
மொத்தம் 60 நாள் அவர் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் விஜய், வரும் 26-ஆம் திகதி சென்னை திரும்புகிறார். இதையடுத்து 29-ஆம் திகதி போட்டோ ஷூட் நடக்கிறது.
ஜூலை முதல் திகதியில் இருந்து படப்பிடிப்புத் தொடங்குகிறது. விஜய்யின் அறிமுகப் பாடலுக்காக, சென்னை பின்னிமில்லில் 3 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஷூட்டிங் சீனாவிலும் நடக்க இருக்கிறது. அங்கும் மூன்று கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப் பட உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று இரவு 12 மணியளவில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை புலி படக்குழுவினர் வெளியிட்டனர்.
ராஜா போன்று கையில் வாள் வைத்துக் கொண்டு விஜய் நிற்பதுபோன்று அந்தப் போஸ்டர் உள்ளது.
