ராஜபக்ஷ கிராமத்தில் பேய்கள் நடமாட்டம்: மக்கள் அச்சத்தில்!

ம்புட்டுகம ராஜபக்ஷ கிராமத்தில் ஆண், பெண் மற்றும் 14 வயதுடைய பெண் ஆகியோர் வெள்ளை உடையில் உலாவி வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ராஜபக்ஷ கிராமத்தின் கிராம சேவகர் அசோகா தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில், 

கிராமத்தில் பல பேர், இதே போன்று வெள்ளை உடையில் மர்ம உருவங்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே கிராமத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சூனியக்காரர் ஒருவரை வரவழைக்க உள்ளோம்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 வயதுடைய இந்திராவதி என்ற பெண் வழமை போன்று தனது பயிர்செய்கை நிலத்துக்கு நீரை திறந்து விடுவதற்காக நள்ளிரவில் தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

குறித்தப் பெண் சம்பவ தினத்தன்று மாமிசம் ஒன்றும் உண்டு இருக்கவில்லை. மேலும் அவருக்கு பேய் பற்றிய எவ்வித பயமும் இல்லை. எனினும் குறித்தப் பெண் பெரிய மர்ம உருவத்தை கண்டு அச்சமடைந்துள்ளார். மேலும் அவருடைய அடி பாதத்தில் நக கீறல்கள் காணப்பட்டுள்ளன.

தற்போது அந்த பெண் சுகயீனமடைந்துள்ளதாகவும் உணவு எதுவும் உண்பதில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ராஜபக்ஷ கிராமத்தின் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் இரவு நேரங்களில் வெளயில் செல்ல அச்சம் கொள்ளவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -