பர்மா முஸ்லிம்களுக்காக லண்டனில் ஆர்ப்பாட்டம்!

ர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் கண்டனத்தை வெளியிட கோரியும் இன்று சனிக்கிழமை லண்டன் நகரில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டனப் பேரணி நடைபெற்றது.

பிரதமர் டேவிட் கெமொரொனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தினை SLMDI UK எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது . 

இறுதியில் பிரதமரின் அலுவலக அதிகாரியிடம் மகஜரொன்றையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையளித்தனர்.

பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பிரித்தானியா கண்டிக்க வேண்டும், கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் உதவ வேண்டும், போன்ற பல கோரிக்கைகள் அந்த மகஜரில் எழுதப்பட்டுள்ளன. இந்த கண்டன பேரணியில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் .

மீரா அலி ராஜாய் 
(லண்டனிலிருந்து)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -