அஹமட் புர்ஹான் -
கடந்த சில வருடங்களாக துரித வளர்ச்சியடைந்து வரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி அதன் சின்னத்தினை இன்று உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளது.
(ஒட்டகம்) சின்னத்தை தமது கட்சியின் சின்னமாக அறிவித்துள்ள தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் காலங்களில் சகல தேர்தல்களிலும் களமிறங்க தயாராகிவருவதாகவும், இலங்கை வாழ் தமிழ், முஸ்லிம்,சிங்கள,கத்தோலிக்கர் என சகல சமூக மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக புனரமைத்து எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஒற்றுமைக்கும்,
இறயான்மைக்கும் பலமாக அமைவதுடன் சிறந்த பொருளாதாரத்தையும், அவிபிருத்தியையும், சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், அரசியல் சித்தாந்த விழிப்புணர்வையும் நாட்டில் ஏற்படுத்த அக்கட்சி அர்ப்பணிப்புடன் முயற்சிக்க போவதாகவும், சகல சமூகங்களில் இருந்தும் சமூக பற்றும் ,ஆர்வமும் கொண்ட புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் சகல பிரதேசங்களில் இருந்தும் தெரிவு செய்து களமிறக்கப் போவதாகவும் அக்கட்சி தனது ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
