மஹிந்த - மைத்திரி இணைவார்கள் - பஷில்

ம்முறை பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாத வகையில் வேட்பு மனு தயாரிக்கும் பணிகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பிளவடைவதனை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இரு தரப்பிலும் சில உறுப்பினர்களுக்கும் கட்சியில் வேட்புரிமை வழங்குவது குறித்து இரு தரப்பிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

எப்படியிருப்பினும் சிக்கல் ஏற்படாத வகையில் அதற்கு தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன். நான் இம் முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை, தேசியப் பட்டியல் ஊடாகவும் வரப்போவதில்லை. 

இதேவேளை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -