முஸ்லிம் காங்கிரசில் படித்தவர்களுக்கு இடம் கிடையாது சிறாஸ் மீறாசாஹிப்!

அஹமட் இர்ஸாட்-

ஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்தி கல்முனை நகர பிதாவாக இருந்த நீங்கள் அன்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இனைந்து கொண்டுள்ளதாக பேசபட்டுவருக்கின்றது. அப்படி என்றால் உங்களுடைய எதிர்கால அரசியல் திட்டமானது எதுவாக இருக்கின்றது?

சீறாஸ் மீராசாஹிப்:- 2011ம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்காக சாதரன அபேட்ச்சகராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் உள்வாங்கப்பட்டு அல்லாஹ்வினுடைய நாட்டத்தினாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவின் பிரகாரமும் மக்கள் என்னை அங்கீகரித்திருந்தார்கள். கட்சிக்குள் 35 வருடங்களாக இருந்தவர்களைவிடவும் 45 நாட்களுக்குள் எனது அரசியல் சாதுரியத்தினால் அதிகவிருப்பு வாக்குகளைப் பெற்று மேயராக உட்கார்ந்து காட்டினேன். ஆனால் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்த நிசாம் காரியப்பர் என்னை விடவும் 3000வாக்குகள் குறைவாக எடுத்திருந்தும் கட்சியானது எனக்கு மேயர் பதவியினை தருவதற்கு நாட்களை கடத்திக் கொண்டே சென்றது. இதனை பொறுத்துக்கொள்ளாத மக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்து, கட்சிக்கு அழுத்தங்கள் கொடுத்ததினால்தான் எனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டிருந்தது என்பதும் முக்கிய விடயமாகும். அதற்கமைய எனது பணியினை நான் இன, மத, மொழி, கட்சி வேறுபாடின்றி திறம்பட செய்துள்ளேன். 

அவ்வாறு சென்று கொண்டிருந்த வேலையில் திடீரென கட்சி என்னை இராஜனாம செய்ய வேண்டும் என வேண்டியதன் பிரகாராம் தான் எனக்கு வாக்களித்த மக்களிடம் சென்று இதுபற்றி கலந்தாலோசித்த வேலையில் கட்சியின் தலைமையானது தன்னை கட்சியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக அறிவித்திருந்தது. இவ்வாறு எனது அரசியல் வளர்ச்சியினை தாங்கிக்கொள்ள முடியாதவர்களும், கட்சியின் தலைமையும் தன்னிச்சையாகவும் சுய அரசியல் இலாபங்களுக்காகவும் முடிவெடுத்து தனக்கு வழங்குவதாக கூறிய பிரதி முதல்வர் பதவியையும் ஒழுங்கான முறையில் வழங்காமையினால்தான் தனது பாடாசாலை நண்பனான அமைச்சர் ரிசாட் பதுர்டீனின் கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- பொதுவாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது சாய்ந்தமருதினை காலகாலமக அரசியல் ரீதியாக ஏமாற்றி வருவதாக கூறப்படுக்கின்றது இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன?

சீறாஸ் மீராசாஹிப்:- இது நல்லதொரு கேள்வி என நினைக்கின்றேன். ஏன் என்றால் சாய்ந்தமருதில் இருந்து பெறப்பட்ட முதலாவது மேயர் நானாகும். அந்த மக்கள் ஆண்டாண்டுகாலமாக முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வருவதானது ஒரு புறம் இருந்தாலும் நான் போட்டியிட்ட 2011ம் ஆண்ட்டுக்கான மாநகர சபைத் தேர்தலின் பொழுது கட்சியும் தலைமையும் நடந்து கொண்ட பக்கசார்பான, தன்னிச்சையான முடிவுகளினல் சாய்ந்தமருது மக்கள் கட்சியின் மீது வைத்திருந்த மன உளைச்சளின் காரணமாக விரக்தியுற்ற நிலையில் இன்றும் இருந்து வருக்கின்றனர். 

முதன் முதலாக மாநகர சபைக்கு முதல்வராக சாய்ந்த மருதிலிருந்து நான் சென்றதனை பொறுத்துக்கொள்ளாத கட்சியும் தலைமையும் எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் அந்த பதவியில் இருப்பதற்க்கு அவகாசத்தினை தருவதற்கு விரும்பாத காரணத்தினை, 

எமது பள்ளிவாயல் நிருவாகம் தலைமையிடம் சென்று ஆறு மதங்களாவது அவகாசம் தறுமாறு கேட்டுக் கொண்டும் தலைமையானது எங்களை கடுகளவேனும் கண்டுகோள்ளாது பள்ளிவாயல் நிருவாக சபையை கேவளப்படுத்தியதை பார்க்கும் பொழுதும், மாகாண சபையில் ஜெமீலுக்கு முதலமைச்சுப் பதவி தருவதாக வாக்களித்து விட்டு பின்பு தனது சுயலாபத்துக்காகவும், தன்னிச்சையான முடிவின்பாலும் கட்சியினை அழிப்பதற்கு நீதிமன்றம் ஏறி இறங்கிய ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு கடைசி நேரத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சு பதவி கொடுத்தமையினை எல்லாம் பார்க்கும் பொழுது சாய்ந்தமருது மக்களை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த பார்வையில் நோக்குகின்றது என்பது தெளிவானவிடயமாக இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- உங்களைப் பற்றிய ஒரு முக்கிய குற்றச்சாட்டாக சமூக வலைத்தளங்களில் அதாவது நீங்கள் அரசியலில் கால்வைத்து மூன்று வருடங்களுக்குள் மூன்று கட்சிகள் மாறிவிட்டீர்கள் என பரவலாக பேசப்படுக்கின்றது இது சம்பந்தமாக நீங்கள் எந்த கருத்துடன் இருக்கின்றீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- இதை கட்டாயம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயமாகும். எனது அரசியல் பயணம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு அன்று இழைக்கப்பட்ட அநீதியைப் போன்று உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் என்ன முடிவினை எடுதிருப்பீர்கள் என என்னால் கூறமுடியாது. இருந்தும் நான் முதல்வராக இருந்த காலத்தில் எவ்வாறு அந்த பதவியினை வைத்து மக்களுக்கு சேவையினை செய்ய வேண்டும் அல்லது மாநகர சபையின் அதிகாரங்களை வைத்துக்கொண்டு எவ்வாறான அபிவிருத்தி முன்னெடுப்புக்களை செய்ய முடியும் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தி எனது வேலைத்திட்டங்களை திறம்பட செய்து வந்திருந்தேன். 

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் சில மூத்த போராலிகளும், தலைமையும் ஒன்று சேர்ந்து தன்னிச்சையான முடிவினை எனக்கெதிராக எடுத்தமையினாலேயே சாய்ந்தமருததுக்கு தனியான நகரசபையினை பெற்றுக்கொள்ளாம் என்ற அடிபடையில் அதாவுல்லாவினுடைய மக்கள் காங்கிரசில் இனைந்தேன். ஆனால் அது முடிவுறும் தறுவாயில் இருக்கும் பொழுது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அதனையும் இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் ஜானாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு எனது பாடசாலை நண்பனான அமைச்சர் ரிசாட் பதுர்டீனின் வேண்டுகோளுக்கு இனங்க நான் தூர நோக்கு அரசியல் சிந்தனையுடனும் அல்லாஹ்வின் மீது வைதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்துள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியானது உங்களுக்கு அழைப்பு விடுத்த சமயத்தில் பச்சை கொடியினை காட்டியவாறு இருந்த நீங்கள் கடைசி நேரத்தில் அமைச்சர் அதாவுல்லாவுடன் சேர்ந்து மஹிந்த் ராஜபக்ஸ்ஸவுக்கு ஆதரவளித்தமையானது உங்களுக்கு வாக்களித்த மக்களின் முடிவுகளுக்கு மாறுபட்ட விடயம் என நீங்கள் கருதவில்லையா?

சீறாஸ் மீராசாஹிப்:- கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நாட்டின் தலைமையினை மாற்ற வேண்டும் என்ற முடிவினை அகில இலங்கை ரீதியாக எடுத்திருந்தார்கள் என்பது உண்மை. இந்த நிலையிலேதான் முஸ்லிம் காங்கிரசும் கடைசி நேரத்தில் தங்களது அரசியல் இருப்பினை அம்பாறை மாவட்டத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக மைத்திரி அலைக்குள் பதுங்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தமையானது உண்மையான விடயமாகும். முஸ்லிம் காங்கிரஸ் எனக்கு இழைத்த துரோகத்திற்கு பின்னர் எனது முக்கிய நோக்கமாக இருந்தது சாய்ந்தமருதினை ஓர் நகர சபையாக மாற்றுவதாகும். 

அதனால்தான் அமைச்சர் அதாவுல்லாவுடன் கதைத்து சாய்ந்தமருதினை நகர சபையாக மாற்றித்தரும் விடயத்துக்காக மஹிந்த ராஜபக்ஸ்ஸவை ஆதரிக்கும் முடிவினை எடுத்திருந்தேன் அதனை எனக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் புரிந்து கொள்வர்கள் எனற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- சாய்ந்தமருதில் உங்களின் தலைமையின் கீழ் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டதாகவும் பின்னர் அதனை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்துள்ளதாகவும் பேசப்படுக்கின்றதே இதன் உண்மை நிலை என்ன?

சீறாஸ் மீராசாஹிப்:- நான் முதல்வராக இருந்த காலப்பகுதிக்குல் நெல்சிப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலக வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறுவர் பூங்காவினை அமைக்கும் திட்டமானது எனது கணவாக இருந்த விடயமாகும். அந்த வகையிலே முதற்கட்டமாக65 இலட்சம் ரூபாய்க்களை நான் ஒதுக்கி ஆரம்பகட்ட வேலைகளை பல பொறியலாளர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்து திறப்பட உறுவாக்கிக்கொண்டிருந்தோம். 

இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரசினை சேர்ந்த உள்ளூர் அரசியல் வாதிகளே கரையோர பாதுகாப்பு தினைக்களதுக்கெல்லாம் சென்று அனுமதியில்லாமல் கட்டுக்கின்றார்கள் என முறையிட்டு தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பிற்பாடு நீதிமன்றத்துக்கு இவ்விடம் கொண்டு செல்லப்பட்டு அதிலும் நாங்கள் வெற்றிபெற்று மீண்டும் இதனை சம்பூரணமக பூர்த்தி செய்வதற்காக இரண்டாம் கட்டமாக இன்னும் ஒரு கோடி ரூபாய்களை ஒதுக்கி பூங்காவினை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியிருந்த நிலையில் துரதிஸ்டவசமாக என்னை முதல்வர் ஆசனத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரசும் தலைமை தூக்கி எறிந்தது. 

அதற்குப் பிற்பாடு இன்று இரண்டு கற்களையும் மூன்று சுவர்களையும் வைத்து அந்த பூங்காவினை முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை அழைத்து வந்து வளுக்கட்டயமாக பூர்த்தி அடையாமலே திறந்து வைத்துள்ளனர். திரந்து வைத்ததற்குப் பிற்பாடு அடுத்த நாளே எவறும் அங்கு செல்ல முடியாதவாறு அதற்கு பூட்டுப் போட்டு வைத்துள்ளனர்.

அஹமட் இர்ஸாட்:- கூடுதலாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அறிமுகத்தினை கொடுக்கும். ஆனால் ஒரு சில வருடங்களுக்குப் பிற்பாடு அரசியல் அறிமுகத்தினை பெற்றவர்கள் வேறு கட்சிக்கு தாவி முஸ்லிம் காங்கிரசினை விமர்சிக்கின்றனர். இது உக்களுடைய அரசியல் வாழ்க்கையிலும் இடம் பெற்றமைக்கான பொதுவான காராணமாக எதைப்பார்க்கின்றீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- நல்லவர்களை அந்த கட்சிக்குள் ஒரு காலமும் இருக்க விடமாட்டார்கள். படித்தவர்கள், அறிவாளிகள், பணம் படைத்தவர்கள் சமூகத்துக்காக ஒரு விடயத்தினை சாதிக்க வேண்டும் என நினைக்கின்ற நிலையில் கட்சியும் முக்கியமாக கட்சியின் தலைமையானதும் குறிப்பிட்டவர்களை தடுத்து நிருத்தி விடும். இதுதான் இன்றைய முஸ்லிம் காங்கிரசினுடைய நிலைமையாகும். முஸ்லிம் கங்கிரசில் செல்வாக்கு படைத்தவர்கள். அறிவாளிகளுக்கு, பணம் படைத்தவர்களுக்கு, சமூதாயத்தின் நன்மதிப்பை பெற்றவர்கள், சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என துடிப்பவர்கள், போன்றவர்களுக்கு சிறீலங்கா முச்லிம் காங்கிரசில் ஒரு போதும் இடம் கிடையாது.. 

நானும் கட்சியில் இருந்தவன் என்ற ரீதியில் பொறாமையும், காற்புணர்சியும் முஸ்லிம் காங்கிரசுகுல் மாத்திரம்தான் இருக்கின்ரது. அதாவுலாவின் கட்சியில் இருந்தவன் என்ற வகையில் பார்க்கும் பொழுது சிறீலங்கா முச்லிம் காங்கிரஸ் எந்த நிலையில் இருக்கின்றது என்பது எனக்கு தெளிவாக விளங்குகின்றது. எனவேதான் அரசியல் அறிமுகம் கொடுக்கின்ற இந்த முஸ்லிம் காங்கிரசினை விட்டு அதன் உருப்பினர்கள் கட்சியில் இணைந்து ஒரு வருடத்துக்குள்ளேயே வெளியேறுக்கின்றனர்.

அஹமட் இர்ஸாட்:- கல்முனை சாய்ந்தமருது எனும் பிரதேசவாதமானது அரசியல் ரீதியாகவும் இன்னும் பல விடயங்களிலும் பூதகராமாக காலத்துக்காலம் வெடிப்பதற்கான காரணத்தை பிரதேசத்தின் அரசியல்வாதி என்ற ரீதியில் நீங்கள் எவ்வாறு பார்க்கின்ரீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- ஒரு சிலரினால் உருவாக்கப்படுக்கின்ற விடயமாகத்தான் இந்த பிரதேவாத பிரச்சனையினை பார்க்கின்றேன். நான் முதல்வராக இருக்கும் காலப்பகுதியில் கூட சிலரினால் சாய்ந்தமருதானே வெளியேறுடா என கூச்சலிட்டார்கள். இது ஒட்டுமொத்த கல்முனை சாய்ந்தமருது மக்களினால் முன்னெடுக்கப்படும் பிரச்சனை அல்ல. சுய நல அரசியல் இலபங்களுக்காக திட்டமிடப்பட்டு சிலரினால் பிரதேசத்தில் பூதாகரமான பிரச்சனையாக இதனை சித்தரித்து இரண்டு ஊர்களுக்கும் இடையில் பகைமையினை உண்டாக்கி அரசியல் குளிர்காய்க்கின்றனர். இதனை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். 

நீங்கள் கூறியதை போன்று சாகிறா கல்லூரி எனும் பாடசாலையினை முக்கியமாக நாட்டில் கருதப்படும் பாடசலையைக் கொண்ட எமது பிரதேசத்தின் படித்த சமூகமானது சிலருடைய பிரதேசவாத சூழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு எமது சகோதரத்துவத்தினை துரதிஸ்ட்வசமாக இழக்க நேரிட்டு பல அரசியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதனை தவிர்த்து புத்தியுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

அஹமட் இர்ஸாட்:- அமைச்சர் றிசாட் பதுர்ட்டீனுடனான நேர்காணலின் பொழுது சீறாஸ் மீறாசாஹிப் வருகையானது கிழக்கு மாகாணத்தில் எமது கட்சிக்கு புதுத்தெம்பினை தருவதாக குறிப்பிட்டார். அந்த வகையில் நீங்கள் வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

சீறாஸ் மீராசாஹிப்:- அரசியல்லுக் அப்பால் அமைச்சர் றிசாட் நெருங்கிய நண்பர் என்ற ரீதியில் அவர் 1990ம் ஆண்டு அகதிகளாக வந்து எனது பாடாசைலை நண்பனாக கொழும்பு சாகிறா கல்லூரியில் இனைந்து கொண்டதற்குப் பிற்பாடு இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கான கட்சியினை ஆரம்பித்து சர்வதேசம் தலைசாய்க்கும் விதத்தில் ஒரு சக்திமிக்கவராக நாட்டில் இருப்பதனை அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். 

அந்தளவுக்கு இறைவன் அவரை விரும்பி இந்த அந்தஸ்தினை அவருக்கு கொடுத்திருக்கின்றான். அதனையிட்டு பெருமைப்படவனாகவே நான் தற்பொழுது அவருடைய கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருக்கின்றேன். அந்தவகையில் வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக எனது அரசியல் ஆலோசகர்களுடனும், எனது மக்களோடும், குடும்பத்தோடும் , நண்பர்களோடும் கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- காலாகாலமாக பாரளுமன்ற பிரதிநிதிகள், அமைச்சர்கள் என கல்முனை பிரதேசத்தில் பலர் காணப்பட்டும் ஏன் எனைய பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் உள்ள வீதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது? இதற்கு என்ன காரணம்?

சீறாஸ் மீராசாஹிப்:- சாய்ந்தமருதில் இருக்கின்ற நூற்றுக்கு 95வீதமான வீதிகளை நாங்கள் புணர் நிர்மாணம் செய்துள்ளோம். சாய்ந்தமருதில் எந்த அரசியல்வாதி வந்து தங்களது அபிவிருத்தி பணிகளை செய்தாலும் எங்களுக்கு எந்தப்பிரச்சனையும் கிடையாது. ஆனால் மறுபக்கத்தில் கல்முனைகுடியினை எடுத்துக்கொண்டால் கல்முனைக்கு வெளியில் உள்ள அரசியல்வாதிகள் அங்கு சென்று அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் விடுவதில்லை முக்கியமாக சொல்லப்போனால் அப்பிரதேசத்தில் உள்ள பிரதேசவாத அரசியல் நடாத்தும் அரசியல்வாதிகளினால்தான் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுக்கின்றது.. இதுதான் கல்முனை குடியின் வீதிகள் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமகும்.

அஹமட் இர்ஸாட்:- வெளிமாவட்டங்களிலேயே பிரபல்யமாக பேசப்படும் கல்முனை சாகிறா கல்லூரியானது அன்மைக்காலமாக தனது பெறுபேறுகளில் மந்தகதியான நிலையினை வெளிக்காட்டுவதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. இந்த நிலைமைக்கு அரசியலா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா?

சீறாஸ் மீராசாஹிப்:- எல்லா பிரச்சனைகளும் சாகிறா கல்லூரிக்குல்தான் இருக்கின்றது. தற்பொழுது சாகிறா கல்லூரியானது அச்சாறாக மாறிய நிலையில் இருந்து வருக்கின்றது. அதற்குள் அரசியல் தலையீடு அல்லது, பழைய மாணவர்களின் பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு அப்பாடசாலை முகம் கொடுத்து வருக்கின்றது. ஒரு காலத்திலே தேசியத்திலே பேசப்படும் பாடசாலையாக இருந்த கல்முனை சாகிறா கல்லூரி என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். 

கடந்த சில வருடங்களாக அதனுடைய நிலைமையும் பெறுபேறுகளும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருந்து வந்தது. இன்சா அல்லாஹ் மீண்டும் அந்த கல்லூரி பழைய நிலைமைக்கு திரும்புமென்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கின்றது. சென்ற முறை பெறுபேறுகளும் திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கின்றமையானது மகிழ்ச்சிதரும் விடயமாக உள்ளதுடன், நான் முதல்வராக இருக்கின்ற காலப்பகுதியில் அதிபராக இஸ்மாயில் இருந்த பொழுது என்னால் முடிந்த உதவிகளை அப்பாடசாலைக்கு செய்துள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- கல்முனை நகரத்துக்கு மாநாகர சபையானது உண்மையில் தேவையான விடயமக இருக்கின்றதா? அல்லது இந்த மாநகர சபையினால் மக்களின் வரிச்சுமையானது அதிகரித்துக் காணப்படுக்கின்றதா?

சீறாஸ் மீராசாஹிப்:- மாநகர சபை என்று பார்க்கும் பொழுது நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. அபிவிருத்திகள், ஒதுக்கப்படும் நிதிகள், அதற்கு கிடைக்கின்ற நன்மதிப்புக்கள் என்று பார்க்கும் பொழுது பிரதேச சபைகளுக்கும், நகர சபைகளுக்கும் கிடைக்கின்ற விடயங்களை விடவும் மாநகர சபைக்கு அதிகளவான நன்மைகளே இருக்கின்றது. உங்களுடைய பார்வையில் மக்களின் வரிச்சுமையானது அதிகரிகரிக்கின்றது என்பது ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அவ்வரிச்சுமையினால் மக்கள் ஒரு போதும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என்பது எனது கருத்தாகும். 

வரிச்சுமையினை நாங்கள் பங்கீடு அல்லது அறவீடு செய்யும் பொழுது மக்கள் பாதிப்புக்குள்ளாகாத வகையிலேயே அதனை மேற்கொள்கின்றோம். பொதுவாக பாண்டிருப்பு பிரதேசத்தில் வாழுக்கின்ற தமிழ் மக்களுக்கு மிகவும் குறைந்தளவிலான வரியினையே அறவிட்டு வந்திருந்தோம். ஆகவே மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப உள்ளூராட்சி மன்றங்கள் நகரசபையாக மாற்றப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஜாதிபதி தேர்தல் காலத்தில் முக்கிய கோரிக்கையாகவும், பிரச்சார ஆய்தமாகவும் பயண்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய கரையோர மாட்டவட்ட கோரிக்கையினை நீங்கள் அப்பிரதேசத்தை பிரதி நிடிதித்துவப்படுத்துக்கின்ற அரசியல்வாதி என்ற ரீதியில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- அம்பாறை கரையோர முஸ்லிம்கள், கிழக்கு மாகாணம் என்று வரும்பொழுது முஸ்லிம்களுக்கான தனியான அலகு என்ற ரீதியில் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் கணவின்படியிலும் அப்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி கரையோர மாவட்டமானது முஸ்லிம்கலுக்கு தேவை என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்து கிடையாது. 

ஆனாம் முஸ்லிம் காங்கிரசானது தேர்தல் ஒன்று வரும் பட்சத்தில் மட்டுமே ஆக்ரோசமாக தேர்தல் மேடைகளில் இந்த கரையோர மாவட்ட பிரச்சனைகளை பூதாகரமாக பேரினவாத சக்திகளுக்கு தீனி போடும் விடயமாக மாற்றி அதனை அரசியல் காய்நகர்த்தல்களுக்கு பயண்படுத்தி அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளை குறிவைத்து கரையோர மவட்ட கதைகளை நாடகமாக நடிக்கின்றனர். ஆனால் வருக்கின்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் நாடக பேசுக்களுக்கு எவ்வாறான பதில்களை கொடுக்கலாம் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

அஹமட் இர்ஸாட்:- கட்சியில் அதிகமான சிரேஸ்ட உறுபினர்கள் இருக்கத்தக்க திடீரென ஹாபிஸ் நசீர் அஹமட் உள்வாங்கப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியும் வங்கப்பட்டமையினை நீங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- நான் ஹாபிஸ் நசீரைப் போன்று மோசமான குற்றத்தினையோ துரோகத்தினையோ இந்தக் கட்சிக்கு செய்தவனல்ல. அப்படியிருந்தும் எனது முதல்வர் பதவி கட்சியின் தலைமையினால் பறிக்கப்பட்டது. இந்த கட்ட்சியினை இரவோடிர்வாக அழிக்க நினைத்தவர்களையெல்லாம் கட்சியானது உள்வாங்கி அவர்களுக்கு அதியுயர் பதவிகளை கொடுத்திருக்கின்றமையானது கட்சியிந்தலைமையின் தான்தோன்றித்தனத்தையே எடுத்துக்காட்டுக்கின்றது. 

சகோதரர் ஜெமீலுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவருக்கு முதலைமைச்சு தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட பின்னர் அதுவும் மறுக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற வகையில் அமைச்சுப் பதவியாவது கொடுக்கத்தவறியமையனது உண்மையில் மனவேதனையளிக்ககூடிய விடயமாகவே இருக்கின்றது. சர்வதிகாரத்தினை கட்சியின் தலைமை கையில் எடுத்திருப்பதானது அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் மூத்த போராலிகளின் மனங்களை பொதுவாக பாதித்துள்ளது.

அஹமட் இர்ஸாட்:- கடைசியாக நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற உங்கள் பிரதேச மக்களுக்கு உங்களுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கை சம்பந்தமாகவும், வருக்கின்ற பொதுத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவது சம்பந்தமாகவும் எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?

சீறாஸ் மீராசாஹிப்:- சீறாஸ் மீறாசாஹிப் முதல்வராக இருந்த காலப்பகுதியில் எவ்வாறு அந்த பதவியினை பிரதேசத்துக்காக பயண்படுத்தியுள்ளார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்லாமல் கல்முனை நகர எல்லையை தாண்டியும் என்னைப்பற்றி மக்கள் நன்றாக விளங்கி வைத்துள்ளர்கள் என்பதில் நான் அல்லாஹுக்கு நன்றி செலுத்தியவானக் பெருமைப்பட்டுக்கொள்கின்றேன். 

நாங்கள் எதற்கும் அடிபனியாமல் எங்களுடைய வாக்குப் பலத்தினை ஜனநாயக கொள்கை ரீதியில் ஆயுதமாக பயண்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு வருக்கின்ற தேர்தலில் தகுந்த பாடத்தினை கற்பிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதற்கு இறைவன் நாடியிருந்தால் அல்லது கட்சி அதற்கு அனுமதி அளிக்குமானால் இன்சா அல்லாஹ் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தினை என்னுடைய மக்கள் தருவார்களாயின்,

 நான் இன்சா அல்லாஹ் நிச்சயமாக திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள சகல இன மக்களும் சகல விதத்திலும் வாழுவதற்கு முதல்வர் பதவியினை எவ்வாறு என்னால் முடிந்த மட்டில் பயண்படுத்தினேனோ அதற்கு மேல் பல படிகள் சென்று பாராளுமன்ற பதவியையும் பயண்படுத்துவேன் என எனது பிரதேச மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

வீடியோ:- முன்னாள் கல்முனை மேயர் சிறாஸ் மீராசாஹிப் உடனான நேர்காணல்:- 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -