தென்னிலங்கையில் வாழும் வடபுல முஸ்லிம் மக்களே..!

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

வ்வளவு விரைவாக உங்கள் பூர்வீகப் பிரதேசத்தில் மீளக்குடியேற முடியுமோ அவ்வளவு விரைவாகக் குடியேறி விடுங்கள்.அவல வாழ்வின் (25 வருடம்) கால்நூற்றாண்டு எம்மைவிட்டுச் செல்லப்போகின்றது.

10 பேர்ச்சர்ஸ் பாரில் பற்று வைத்துக் கொண்டு புகுந்த இடத்தில் பதுங்கிக் கொண்டே இருந்தால் பூர்வீக இடத்தில் பல ஏக்கர் காணி நிலம் பறிபோகும் அபாயம் புதிது புதிதாய்த் தோன்றும் சுவர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகுமா? இன்று மறிச்சுக்கட்டி நாளை எப்பிரதேசமோ யாமறியோம் விழிப்பாக இருப்போம்.நாம் வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மீளக்குடியேறிஇருந்தால் இப்படியான இனப்பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். 

இன்று சில பிரதேசங்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.ஆனால் உரிய பயனாளிகள் இன்னும் சென்று குடியேறவில்லை.இது ஆரோக்கியமானதல்ல.நமது தாமதமும் அசமந்த போக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒன்று படுவோம்.ஒன்றாய் எழுந்து நிற்போம்.வெற்றி நமதே ,நாளை நமதே.பொதுத்தேர்தல் நடைபெறப்போகிறது எமது ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது. கடந்த சனாதிபதித் தேர்தலில் எம் உறவுகள் வன்னி சென்று வாக்களிக்க விடாமல் வழியிலே தடுக்கப்பட்டதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -