2.5 மில்லியன் ரூபா செலவில் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளுக்கு மின்சாரம்!

அபூ - இன்ஷாப்-

க்கரைப்பற்று பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாசீக் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் பாராளுமன்ற உருப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான தூண் மற்றும்  கம்பியிடல் அங்குரார்பன நிகழ்வு நேற்று (25) வியாழக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின்  முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாசீக் கலந்து கொண்டார்.

கௌரவ அதீதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.இல்லியாஸ் உட்பட பிரதேச சபை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

01 கிலோ மீட்டர் பிரதேசத்துக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி வீதி,  பொத்துவில் றைவர் வீதி, அதஉல்லா விளையாட்டு மைதான வீதி, வைத்தியர் வீதி என்பவற்றுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -