மத்திய கொழும்பிலிருந்து பைரூஸ் ஹாஜி வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்னுடன் பாராளுமன்றம் செல்வார் என பகிரங்கமாக மத்திய கொழும்பு அழுத்கடையில் மாணவர்களுக்கான இலவச அத்தியவசிய பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டு திறண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்னால் உறுதிமொழி வழங்கினார்.
சுமார் 3000க்கும் அதிகமான பொதுமக்கள் சமூகமளித்து மிகவும் கோலாகலமாக இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து உரையற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய கொழும்பினதும் அழுத்கடை பிரதேசமக்களினதும் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பாதுக்காக்கக்கூடிய ஒரே ஒரு மத்திய கொழும்பைச் சேர்ந்த அரசியல்வாதி என்றால் தற்பொழுது பைரூஸ் ஹாஜிமட்டுமே இருக்கின்றார். ஆகையால் வருக்கின்ற பொதுத்தேர்தலில் மத்திய கொழும்பில் வாழுகின்ற மக்கள் அவரை கெளரவப்படுத்தி பாராளுமன்றம் அனுப்புவதானது அவர்களுடைய கட்டாய கடமையாகவே தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் 30வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவாரக இருந்து வரும் பைரூஸ் ஹாஜி அவருடைய அரசியல் வாழ்க்கையில் வேறு எந்த கட்சிக்கும் சென்றுவிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியிலே இருந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தலைமைத்துவத்தின் இஸ்தீர தன்மைக்கும் ஒத்துளைப்பு வழங்கிவருக்கின்றமையானது நான் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவரின் கோட்டையாக கருதப்படும் அழுத்தகடை பிரதேசமான இவ்விடத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என தெரிவித்ததோடு, பல தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியினை அடைந்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மத்திய கொழும்பில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கும், ஐக்கிய தேசியக்கட்சியானது கூட்டாக ஆட்சியினை அமைப்பதற்கும் மத்திய கொழும்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையில் பைருஸ் ஹாஜியின் பங்கானது அளப்பெரியதாக காணப்பட்டதனை இங்கு முக்கியமாக ஜாபகப்படுத்திக் கொள்ள விரும்புக்கின்றேன்.
ஆகவே அழுத்கடை மக்களும் மத்திய கொழும்பு வாழ் மக்களும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பைரூஸ் ஹாஜியின் விடயத்தில் முக்கியமான நல்ல முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது எனக் கூறினார்.
ஆகவே அழுத்கடை மக்களும் மத்திய கொழும்பு வாழ் மக்களும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பைரூஸ் ஹாஜியின் விடயத்தில் முக்கியமான நல்ல முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது எனக் கூறினார்.
அதே நேரம் அங்கு உரையாற்றிய கடுவலை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நீதி அமைச்சருமான சுஜீவ சேனசிங்க பைரூஸ் ஹாஜி தான் மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகுவதற்கு தனக்கு மிகவும் ஒத்துளைப்பினை வழங்கியதாகவும், எப்பொழுதும் சகோதரத்துவம் நிறைந்த நட்பினை தான் பைரூஸ் ஹாஜியுடன் பேணி வருவதாக குரையாற்றிய சுஜீவ சேனசிங்க , வருக்கின்ற பொதுத்தேர்தலில் பைரூஸ் ஹாஜி நிச்சயமாக எங்களுடன் பாராளுமன்ற கதிரையில் உட்கார்வார் எனத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் கடந்தகால மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இனரீதியான அடாவடித்தனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வேலைகளிலெல்லாம் பைரூஸ் ஹாஜி நடு இரவிலும் கூட என்னுடன் தொடர்பு கொண்டு உடனடியாக அதனை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டிக்கொண்டது மட்டுமல்லாமல் அவரினால் இயலுமான எதிர்ப்பு நடவடிகளையும் அரசியல் ரீதியாக பரவலாக தன்னுடைய சமூகம் என்ற பார்வையில் மேற்கொண்டிருந்தார். ஆகவே கொழும்பு வாழ் முஸ்லிம் சமூகமானது அவரினை வருக்கின்ற பொதுத்தேர்தலில் கெளரவப்படுத்துவதானது இப்பிரதேச மக்களின் தார்மீகப் பொறுப்பாகும்.





