அழுத்தம் கொடுக்கப்பட்டமையினாலேயே பாராளுமன்றம் கலைப்பு - ஆரிப் சம்சுடீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமினால் 20க்கான யதார்த்தபூர்வமான முன்மொழிவு முன்வைக்கப்பட்டு, அதன் மூலம் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் கருத்துகைளை ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தம்; கொடுக்கப்பட்டமையும் பாராளுமன்றக் கலைப்புக்குக் காரணமாகவுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் இன்று(27) சம்மாந்துறையில் நடைபெற்றது. ,தில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்றம் எப்போது கலையும் என்ற கேள்வி ,ந்நாட்டு மக்கள் மத்தியில் நிலவி வந்;தது. ,ருப்பினும், சுதந்திரக் கட்சியினர் 20யும் தங்களுக்கு ஏற்ற வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சித்தனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் ,தில் முன்னணி வைகித்தனர்.

பாராளுமன்றத்தில் சிறுபான்மையின மற்றும் சிறிய கட்சிகளின்; செல்வாக்கைக் குறைப்பதற்காக குறிப்பிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டு செயலுவுருக்கு கொண்டுவரப்படவிருந்த 20வது திருத்தம் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பெரும் எதிர்ப்பு அலையின் காரணமாக நிறைவேற்றப்படுவது தடுக்கப்பட்டதென்றே கூற வேண்டும்.

இந்த நிலையை உருவாகுவதில் மிகப்பெரிய பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வகித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரிரு அமைச்சர்களினதும் எதிர்கட்சியினதும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனது நிலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது தான் முன்வைத்த முன்மொழிவின் யதார்த்தத்தினை சிறிய மற்றும் சிறபான்மைக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி, அவர்களை ஒன்றிணைத்துச் செயற்பட்டதன் விளைவு பல தாக்கத்தை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ,ந்த ஒற்றுமையுடனான செயற்பாடு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு மைக்கல் என்றே கூற வேண்டும். அவ்வாறே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்;தலில் எமது பிரதிநிதித்துவங்களை பெற்றிகொள்ள தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கிமின் கரம் பலப்படுத்தப்படுவது அவசியம் என மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -