உள்ளுராட்சி மன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

அபு அலா-

ம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிய 163 பேருக்கு நிரந்த நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (27) மாலை சம்மாந்துறை மற்றும் அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகவும், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன் கௌரவ அதிதிகளாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் எம்.இர்சாட், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசித் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இந்த நியமனங்களை வழங்கி வைத்தனர்.

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றிவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில், பொத்துவில் பிரதேச சபையில் கடமையாற்றிய – 15 பேருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் – 20 பேரும், சம்மாந்துறை பிரதேச சபையில் – 34 பேரும், கல்முனை மாநகர சபையில் – 19 பேரும், நிந்தவூர் பிரதேச சபையில் – 12 பேரும், காரைதீவு பிரதேச சபையில் – 18 பேரும் இந்த நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை அம்பாறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாநகர சபையிலிருந்து – 21 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச சபையில் – 06 பேரும், திருக்கோவில் பிரதேச சபையில் – 10 பேரும், மகஓய மற்றும், லாகுகல பிரதேச சபையில் – தலா 02 பேர் வீதமும், பதியத்தளாவ, நாமல் ஓய, உகண மற்றும் இறக்காமம் பிரதேச சபையிலிருந்து தலா – 01 பேர் வீதம் இந்த நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.


அபூ - இன்ஷாப்-

ம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேச உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய மேற்பார்வை உத்தியோகத்தர்கள், வாசிகசாலை உதவியாளர்கள், சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) சனிக்கிழமை பிற்பகல் சம்மாந்துறை இப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக அரசின் 100 நாள் வெலைத்திட்டத்தின் கீழ் 180 நாட்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழே இந்த நியமனம் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைககள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் விஷேட ஆணையாளர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இந்த வைபவத்தின் போது 686 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -