ராஜித தனக்கு வாக்களித்த மக்கள் மட்டுமல்லாது முழு முஸ்லிம் சமுதாயத்தையும் அவமானப்படுத்திவிட்டார்-பழீல் BA

மைச்சரவைப் பேச்சாளர் என்பவர் பக்குவமான முறையிலும் போதிய தயாரிப்புடன் கவனமாகவும் தமது கருத்துக்களைக் கையாளவேண்டும். பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற ஒருநாட்டில் அரசாங்கப் பேச்சாளராக இருப்பவர் முன்யோசனை யில்லாமல் பேச்சுக்களின் பாரதூரங்கள் விளங்காமல், வாய்க்கு வந்தவாறு  கருத்துக்களை அள்ளிவீசுவது கண்டிக்கப் படக்கூடியதாகும். அமைச்சர் ராஜித தென்பகுதியில் குறிப்பாக களுத்துறை,பேருவளை,அளுத்கம போன்ற பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் வாக்கினையும்,ஆதரவினையும் பெற்ற ஒருவர். 

அவர் முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்தபோதிலும் இவ்வாறான கருத்தினை வெளியிட்டமையானது இஸ்லாமிய சமயத்தின், முஸ்லிம்களின் அடிப்படைத்தத்துவங்கள் விளங்காமலும் எமது தேசியத்தலைவரின் சமூக அந்தஸ்து,பண்பாடு குறித்த அவரின் அறியாமையைப் பிரதிபலிக்கின்றது.

இதுதான் இந்நாட்டு பெரும்பாண்மையினர் மத்தியிலுள்ள முக்கியமான பிரச்சினையாகும்.' இவ்வாறு சமாதானம் நல்லிணக்கத்திற்கான ஒழுங்கமைப்பின் பணிப்பாளர் நாயகமும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்சபீட உறுப்பினரும், கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜனாப்.எஸ்.எல்.எம். பழீல்BA அவர்கள்  அமைச்சர் ராஜித சேனாரத்ன சி.ல.மு.காங்கிரஸின் தேசியத்தலைவர் கௌரவ அமைச்சர் ரஊப் ஹக்கீம் பற்றி தெரிவித்துள்ள முரண்பாடான கருத்துக்கள் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.ல.மு.காங்கிரஸ் தலைவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மறைந்த எமது பெருந்தலைவர் அஷ்ரஃப் உருவாக்கியபோது அதனை, அதன் யாப்பினை  ஏனைய அரசியற்கட்சிகள் போன்று வெறுமனே அபிவிருத்திக்கான அணியாக,  கட்சியாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் அதனை முஸ்லிம் சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளுக்காக தியாகங்களுடன் போராடும் ஒரு இயக்கமாகவே ஆக்கியளித்து அதற்கான போராட்டத்தில் தனது உயிரையே மாய்த்தவர். 

அடிப்படைகளில் நின்றுதான் சமகாலத் தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்களும் 

(2) அதே சி;.ல.மு.காங்கிரஸ் எனும் தன்னிடம் சாட்டப்பட்ட அமானிதத்தினை, பொறுப்பினை முடியுமான அளவிற்கு இன்றுவரையும் நிறைவேற்றி வருகின்றார்.மனிதன் என்ற அடிப்படையில் குறைபாடுகள் அவரிடமும் இருக்கலாம். 

இந்நாட்டில் பல்லின மக்களுடன் சகவாழ்வினைக் கடைப்பிடிக்கும் அதேவேளையில் தனது சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளையும் பேணவேண்டிய பொறுப்பு இலேசுமாசானதல்ல. ஆகவேதான் எல்லாவிடயங்களிலும் சி.ல.மு.காங்கிரஸ் தலைவர் ஏன் முரண்படுகின்றார்? ஏன் வித்தியாசமாக அணுகுகின்றார்? என்ற கேள்விகளை இஸ்லாமிய சமுதாயப்பின்னணியோடும் அவர் வகிக்கின்ற பதவியோடும், இறைவனுக்கும் சமுதாயத்திற்கும் பதில் கூறவேண்டிய பொறுப்புடனும் அணுகவேண்டிய கடமை அப்பதவிக்குள்ளது. 

ஆகவே தலைவர் ரஊப் ஹக்கீம் ஹலால் பிரச்சினை என்றால் என்ன? பள்ளிவாசல் பிரச்சினை என்றால் என்ன? பர்தாஃஹிஜாப் பிரச்சினை என்றால் என்ன? 20யு பிரச்சினை எமது சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? ஏன் எல்லாவற்றிலும் அரசுக்குள்ளும் வெளியிலும் முரண்படுகின்றார்? என்ற பிழையான கருத்துக்கள் ஏனைய சமூகத்தவர்கள் மத்தியில் மட்டுமல்ல எம்மவர்கள் மத்தியிலும் நிறையவே காணப்படுகின்றன. 

ஆனால் அது அவர் வகிக்கும் பதவியின் இயற்கையான யதார்த்தமாகும் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இஸ்லாமிய சமுதாயப் பின்னணியை விளங்காமல் பெருந்தலைவர் அஷ்ரபையோ,அல்லது ரஊப் ஹக்கீமையோ அல்லது சி;.ல.மு.காங்கிரசின் எந்தத்தலைவரின் போராட்ட வாழ்வையோ எவருக்கும் விளங்கமுடியாது என்பதுதான் இயற்கையான இரகசிய யதார்த்தமாகும். இதை ஏனையவர்களுக்கு புரியவைக்க வேண்டிய பெருங் கடமையைத்தான் எமது அறிஞர் பெருமக்கள் செய்யவேண்டியுள்ளது. 

(3) 
உச்சபீடக் கூட்டங்கள்: 
        இஸ்லாமிய அடிப்படைக்கோட்பாடுகளும் அதன் நடைமுறைகளும மக்களோடு பிரிக்க முடியாதவாறு வாழ்க்கை வழிகாட்டியாக இரண்டறக் கலந்திருப்பதனால் எல்லா சட்டநகர்வுகளிலும் அதன் சரத்துகளை சமுதாயத்தின் நடைமுறைகளோடு உராசிப்பார்த்து தீர்மானத்த்pற்கு வரவேண்டிய தேவை சி.ல.மு.காங்கிரஸ் தலைவருக்குண்டு என்பதை அமைச்சர் ராஜித மட்டுமல்ல ஏனைய அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

எமது தேசியத்தலைவரின் தீர்மானங்கள், அணுகுமுறைகள் சி.ல.மு.காங்கிரசின் உச்சபீடக் கூட்டங்களில் மசூறா அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தோடு, நன்கு அலசி விவாதிக்கப்பட்டே வெளியிடப்படுகின்றன என்ற நடைமுறை உண்மை பலருக்கு விளங்காமல் இருக்கலாம். இது சில.மு.காங்கிரசின் ஆரோக்கியமான செயற்பாடாகும். இதே செயற்பாடுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் சி.ல.மு.காங்கிரசின் உயர்பீடக்கூட்டத்தின் போதும் நடைபெற்றது. 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலென்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது. 

அதற்கான சாதக பாதகங்களை பலகோணங்களில் சமுதாய நோக்குடன் அலசி ஆராயவேண்டிய பொறுப்பு கட்சிக்கும் தலைமைக்குமுள்ளது. சமுதாயத்தினதும் கட்சியினதும் ஒற்றுமையைப் பாதுகாக்கவேண்டியபொறுப்பு இதில் முதன்மையானது. கொள்கையளவில் கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக கட்சியின் உச்சபீடம் எடுத்திருந்த போதிலும் சி.ல.மு.காங்கிரசின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முதல் பிரதேச சபை உறுப்பினர்வரையும் ஒருவரும் விடாமல் அரசாங்கத்தைவிட்டும் வெளியேற்ற வேண்டிய பொறுப்பு தலைமைக்கும் கட்சிக்குமிருந்தது. 

ஆனால் அதைச்செய்ய விடாது மகிந்த அரசு போட்ட சில முடிச்சுகளை அவிழ்க்கவேண்டிய பொறுப்பும் தலைவருக்கும் 

(4)
கட்சிக்குமிருந்தது.அதனால் அறிவிப்பில் ஒருசில தாமதங்கள் ஏற்பட்டன. இதைமட்டும் வைத்துக்கொண்டு பின் கதவால்தான் எமது தலைவர் நுழைந்தார் என அமைச்சர் ராஜித ஏளனம் செய்திருப்பது எமது தலைவர்மட்டுமல்ல, ஜனாதிபதிக்கு மனப்பூர்வமாக வாக்களித்த முழு சமுதாயத்தையும் அவமதித்ததாகவே நாம் கருதுகின்றோம். சி.ல.மு.காங்கிரஸ் தேசியத் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒரு தனிமனிதனல்ல. இந்நாட்டு முஸ்லிம் மக்களுடைய அறுதிப்பெரும்பாண்மையைப் பெற்ற ஒரு தேசியத் தலைவர். 

சில.மு.காங்கிரஸ் 08எம்.பி க்களையும், 25க்கு மேற்பட்ட மாகாணசபை உறுப்பினர்களையும் 200க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களையும,; நாடு முழவதிலும் மத்தியகுழு வலைப்பின்னலில் 1000க் கணக்கான செயற்பாட்டு செயற்குழு அங்கத்தவர்களையும் கொண்ட பெரு விருட்சமாகும். சி.ல.மு.காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்புதான் இந்நாட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வெளிப்படையாக ஜனாதிபதித்தேர்தலில் தமது ஆதரவுகளை ஜனாதிபதி மைத்திரிக்கு வழங்கினர். 

முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த இறை பிரார்த்தனையும் வணக்க வழிபாடுகளும்தான் 5வருடம் பதவியிலிருக்க வேண்டிய மகிந்தவை வீட்டுக்கனுப்பியது என்பதையும் நாம்; உணரவேண்டும். 

ஆகவே பின்கதவால் செல்லவேண்டிய எந்தத்தேவையும் எமது தலைவருக்கோ சி.ல.மு.காங்கிரசுக்கோ கிடையாது அது இந.நாட்டு அரசியலில் ஒரு தீர்மானிக்கும் சக்தி என்பதை அமைச்சர் ராஜிதவும்; ஏனையவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி பதவிக்காக ஹக்கீம் தனதுமதத்தைக் கூட மாற்றிக்கொள்வார் என்ற அமைச்சர் ராஜிதவின் கூற்று அவருக்கு தலைவர் ஹக்கீமையும் தெரியாது,இந்நாட்டு சூழ்நிலையும் விளங்காது அத்துடன் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் அவர் விளங்கவில்லை என்ற உண்மைகளையெல்லாம் வெளிக்காட்டுமின்றது.
News 2015 . 6. 26 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -