தேசிய விடமைப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் நிகழ்வுகள்..!

எம்.வை.அமீர்-

நாடு முழுவதும் இம்மாதம் 23முதல் 29வரை தேசிய விடமைப்பு தின நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றையதின நிகழ்வாக தேசிய விடமைப்பு கல்முனை நகர காரியாலயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பேச்சு,கட்டுரை மற்றும் சித்திரப்போட்டிகள் இடம்பெற்றன. தெரிவுசெய்யப்பட்ட மானவர்களுக்கிடேயே இடம்பெற்ற நிகழ்வுகள், தேசிய விடமைப்பு கல்முனை நகர காரியாலய சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.ஹமீட் அவர்களது வழிகாட்டலில் முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற 27 ம் நாள் மேற்படி நிகழ்வில் முகாமையாளர்களான ஏ.எம்.இப்ராஹீம்,ஏ.ஏ.மஜீட் போன்றோரும் விடமைப்பு கல்முனை நகர காரியாலயத்தின் கணக்காளர் ஊடகவியாலாளர் எஸ்.ரீ.றோசான், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.றஹீம், மற்றும் நத்துப் வாரி போன்றோரும் மத்தியஸ்த்தர்களும் கிராம உத்தியோகத்தர் எம்.என்.எம்.சஜா அவர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கிடையே பேச்சு,கட்டுரை மற்றும் சித்திரப்போட்டிகள் நடாத்தப்பட்டு மத்தியஸ்த்தர்களால் அதே இடத்தில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டு பரிசில்கள வழங்கப்பட்டதுடன் எனையா மாணவர்களுக்கும் சான்றிதள்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -